செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

40க்கு 40 என சிங்கம் போல் கர்ஜிக்கும் திமுக.. ஜூன் 18-ல் தவெக தலைவர் விஜய் செய்ய போகும் சம்பவம்

Thalapathy Vijay: ‘Time To Lead’ இந்த ஒரு வசனத்திற்காக ஒரு காலத்தில் சினிமாவையே விஜய் வெறுத்து போகும் அளவிற்கு நடந்த சம்பவம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தற்போது இதை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடத்திக் காட்ட இருக்கிறார் தளபதி.

தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்ததோடு, தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளையும் வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருகிறார். மாணவர்களின் கல்வி, இலவச சட்ட ஆலோசகர் என பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் ஒவ்வொன்றையும் முன்னெடுத்து நடத்தி வருகிறது விஜயின் தமிழக வெற்றிக்கழகம்.

சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகி இருப்பதால் அடுத்த கட்டமாக நல்ல மார்க் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து விஜய் பாராட்டவும் இருக்கிறார். பொது சேவைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல் ரீதியாக விஜய் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக கட்சி 40க்கு 40 என நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை சுவைத்திருக்கிறது. விஜய் திமுக கட்சியை தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிட்டார். இதிலிருந்து தன்னுடைய எதிரியை சரியாக தீர்மானித்து விட்டார் என இப்போது அரசியல் களத்தில் பேச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

தவெக தலைவர் விஜய் செய்ய போகும் சம்பவம்

அடுத்து நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வரை இருக்கிறது. அதற்கு முன்னதாக ஜூன் 18ஆம் தேதி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார் விஜய். இந்த கூட்டம் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் மாநில கட்சியாக அறிவிக்க விண்ணப்பித்திருந்தார். தேர்தல் வேலைகள் இருந்ததால் இந்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுப்பது தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கான வேலைகள் தொடங்கி விட்டது. அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றால் தேர்தல் ஆணையம் இந்த மாதத்திற்கு உள்ளாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியை மாநில கட்சியாக அறிவித்து விடும்.

ஒரு கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தன்னுடைய அடுத்த பரிமாணத்தை ஆரம்பிக்க இருக்கிறார் விஜய். இருந்தாலும் தற்போதைய தமிழக அரசியலில் திமுக கட்சி சிங்கம் போல் கர்சித்துக் கொண்டிருக்கிறது.

இதை தைரியமாக எதிர்த்து விஜய் போட்டியிட்டு ஜெயிப்பாரா என்பதுதான் தற்போது எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சமீபத்திய அப்டேட்டுகள்

- Advertisement -spot_img

Trending News