Sivakarthikeyan Vs Lawrence : கொள்ளை அழகு உள்ள ஹீரோயின், தமிழில் நடித்தது ஒரு படம் தான், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் என அனைவரும் இந்த ஹீரோயினை தமிழுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என வலை விரித்து பார்த்தனர். ஆனால் ஹீரோயின் எந்த வலையிலும் சிக்காத கெளுத்தி மீன் போல் வளம் வந்தார்.
இப்பொழுது ராகவா லாரன்ஸ் காணக் கச்சிதமாக அவர் படத்திற்கு அந்த ஹீரோயினை கமிட் செய்து விட்டார். ஏற்கனவே சிவகார்த்திகேயன், முருகதாஸ் படத்தில் அந்த ஹீரோயின் நடிப்பதாக இருந்தது. கால் சீட் பிரச்சினை காரணமாக இந்த ஹீரோயின் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இப்படி சிவகார்த்திகேயனின் 2 படங்களில் நடிக்க முடியாமல் அந்த ஹீரோயின் விலகி விட்டார்
தமிழில் தனுஷ், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்கள் அந்த நடிகை தான் வேண்டும் என அடம் பிடித்து வந்தார்கள். பிஸியான ஹீரோயின் யாருக்கும் மசியவில்லை. ஆனால் இதுவரை அந்த நடிகை நேரடியாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஹிந்தி மற்றும் மராத்தியில்தான் கொடிகட்டி பறந்து வருகிறார்.
துல்கர் சல்மானுடன் சீதாராமன் படத்தில் நடித்த ஹீரோயின் மிர்னாள் தாக்கூர். இந்த நடிகைக்காகவே அந்த படம் பல நாட்கள் தியேட்டரில் ஓடியது. ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல ஒரு காதல் படமாக சீதாராமன் படம் வெளிவந்தது.
பல பேர் இந்த நடிகைக்காக கொக்கு போல் காத்திருந்த போது கன கச்சிதமா ராகவா லாரன்ஸ் தூக்கிவிட்டார். அவர் செப்டம்பர் மாதம் எடுக்கவிருக்கும் தனது காஞ்சனா 4 படத்திற்கு இவரை புக் செய்து விட்டார். ஏற்கனவே காஞ்சனா அடுத்தடுத்த பாகங்களுக்கு செம டிமாண்ட் இருந்து வருகிறது. இப்பவே அதற்கான பிசினஸ் வேலைகளையும் கையில் எடுத்துள்ளார் லாரன்ஸ்.
மிர்னாள் தாக்கூர் பல ஹிந்தி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்பொழுதுதான் தமிழில் முதன்முதலாக காஞ்சனா நான்காம் பாகத்தில் அறிமுகமாகிறார். இதுவே இந்த படத்திற்கு நல்ல பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தை வாங்குவதற்காக எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரன்ஸ் காட்டில் செம மழை தான்.