திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மீனாவை கடத்தி வைத்து முத்துக்கு குடைச்சல் கொடுக்கும் சிட்டி.. சத்யாவிற்கு தெரியவரும் உண்மை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து அவருடைய கல்யாண வாழ்க்கையை பற்றி ரொம்பவே சலிப்பாக நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மீனா அதை கேட்டு விடுகிறார். இதனால் தன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகு முத்து நிம்மதி இல்லாமல் அலைகிறார் என தவறாக புரிந்து கொண்டு மீனா கோபமடைகிறார்.

பிறகு இந்த கோபத்தை வீட்டில் இருப்பவர்களிடம் காட்டிய மீனா யாரிடமும் சொல்லாமல் வெளியே போய் விடுகிறார். இது தெரியாத முத்து, மீனாவை சமாதானப்படுத்துவதற்காக வீட்டிற்கு வருகிறார். ஆனால் வந்து பார்த்த முத்துவிற்கு மீனா எங்கே போய்விட்டார் என்று தெரியாததால் மீனாவின் அம்மாவுக்கு போன் பண்ணி கேட்கிறார்.

முத்துவை பழிவாங்க மீனாவை கடத்திய சிட்டி

அங்கேயும் வரவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சம் பதற்றத்துடன் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்க்கிறார். இதற்கு இடையில் மீனாவை காணும் என்றதும் விஜயா வழக்கம் போல் மீனாவை குறை சொல்லிக் கொண்டு திட்டுகிறார். பிறகு ரோகிணி, மனோஜ், ரவி அனைவரும் சாப்பிடும் நேரத்தில் உணவு எதுவும் இல்லாததால் மனோஜ் மீனாவை திட்டுகிறார்.

உடனே ரவி, மீனா அண்ணி ஏதாவது வேலையாக போய் இருப்பார். ஒருநாள் லேட்டா சாப்பிட்டா ஒன்னும் ஆகாது என்று சொல்லிய நிலையில் விஜயா, ரோகினியை சமைக்க சொல்கிறார். அடுத்ததாக மீனாவை காணவில்லை என்ற விஷயம் மீனாவின் தம்பி சத்யாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் இதற்கு முத்து ஏதாவது குடித்துவிட்டு பிரச்சினை பண்ணி இருப்பார்.

அதனால்தான் மீனா அக்கா மன நிம்மதிக்காக ஏதாவது கோயிலுக்கு போய் இருப்பார் என்று அம்மாவிடம் சொல்லி வெளியே கிளம்பி விடுகிறார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆக வேண்டும் என்று இந்த விஷயத்தை கேள்வி பட்ட லோக்கல் ரவுடி சிட்டி, அக்காவை காணவில்லை அதற்கு காரணம் முத்து தான் என்று போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைண்ட் கொடு என்று சத்யாவை தூண்டுகிறார்.

உடனே சத்யாவும் இதுதான் சரி என்று முத்து மீது கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கிறார். இதற்கிடையில் முத்து அனைத்து இடங்களிலும் தேடியும் மீனாவை காணவில்லை என்றதும் அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வருகிறார். இருவரும் சந்தித்த நிலையில் இவர்தான் எங்க அக்காவை கொடுமைப்படுத்தி ஏதோ பண்ணி இருக்கிறார் என்று சத்யா முத்து மீது பழி சுமத்துகிறார்.

ஆனால் மீனா வழக்கம் போல ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் மணக்குமறலை கொட்ட போயிருப்பார். ஆனால் மீனாவை பார்த்த லோக்கல் ரவுடி சிட்டி, தான் ஜெயிலுக்கு போனதற்கு காரணம் மீனா தான் என்பதால் இவரை வைத்து முத்துவை பழிவாங்க கடத்திருப்பார். ஆனால் மீனாவிற்கு எதுவும் ஆகாமல் முத்து கண்டுபிடித்து விடுவார். இதன் பிறகுதான் லோக்கல் ரவுடி சிட்டியை பற்றி சத்தியா புரிந்துகொண்டு திருந்துவதற்கு வாய்ப்பு அமையப்போகிறது.

சிறகடிக்கும் சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Trending News