புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

ஒரு தமிழனாக அவமதிக்கப்பட்ட விகே பாண்டியன்.. ஒரே ஃபோன் காலில் தளபதி விஜய் எடுத்த அரசியல் வியூகம்

VK Pandian – TVK Vijay: 2024 மக்களவைத் தேர்தல் முடிந்து ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஆளும் பாஜக 3வது முறையாக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் ஒடிசாவை மிரள விட்ட தமிழன் விகே பாண்டியன் அந்த மாநிலத்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் பக்க பலமாக இருந்து தேர்தலை சந்தித்தனர் ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது. பிஜு ஜனதா தள கட்சி பிஜேபியை விட 27 சீட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பிகே பாண்டியன் பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஆவார், சென்னை மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் விவசாயம் சம்பந்தமான படிப்பை முடித்து விட்டு 2000 ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்-க்கு வலதுகரமாக இருந்து அங்கு செயல்படும் திட்டங்களை முழு பொறுப்பேற்று கச்சிதமாக முடிப்பதில் வல்லவர். நடந்து முடிந்த தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்து மக்களின் நம்பிக்கையை பெற்று விடலாம் என்று போராடினார்.

ஆனால் அது கடைசியில் தோல்வியில் முடிந்த சூழ்நிலையில் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இப்போது பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி விகே பாண்டியன் ஒரு தமிழன் ஒடிசாவை ஆள முடியுமா என்ற பிரிவினையை பேச்சை தேர்தலின் போது ஏற்படுத்தி பல சர்ச்சைகளை உருவாக்கினார் அரசியல் களத்தில்.

இது மிகப்பெரிய சர்ச்சை உருவாக்கி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசியலில் பதவிக்காக, பணத்துக்காக நான் வரவில்லை நவீன் பட்நாய்க்கு பக்கபலமாக இருப்பதற்கே அரசியல் களத்தில் குதித்தேன் என்று விகே பாண்டியன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளில் அரசியலுக்கு வந்த விகே பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக பிஜேபி அரசியல் வியூகம் எடுத்தது.

தளபதி விஜய்யின் தரமான அரசியல் வியூகம்

இது ஒரு புறம் இருக்க விகே பாண்டியனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தளபதி விஜய், தமிழக வெற்றி கழகத்தில் எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். ஒரு தமிழனாக இந்தியளவில் தோற்கடிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம் என்று தான் கூற வேண்டும். இந்த அரசியல் வியூகத்தை விஜய் கையில் எடுத்துக்கொண்டு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது 2026-ல் அரசியல் களத்தை ஈசியாக சந்தித்து வெற்றி பெற பக்கபலமாக இருக்கும் என்று நம்புகிறார் விஜய்.

இந்தியளவில் கிடைக்காத பெயரையும், புகழையும் தங்களுக்கு எந்தவித களங்கமும் இல்லாமல் திரும்பப் பெற்றுத் தருகிறேன் என்று உறுதி செய்துள்ளாராம் விஜய். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை விஜய் விரைவில் அறிக்கை மூலமாக வெளியிட்டால் கட்சியின் தொண்டர்களுக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும். வரும் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தமிழக வெற்றி கழகம் சீமானுடன் இணையவும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் 2026 தேர்தலில் இளைஞர்களின் ஓட்டுகளை வைத்து பெரும் மாற்றம் உண்டாகும் என்பது உறுதியாகி வருகிறது.

2026 அதிரடி காட்டும் தமிழக வெற்றி கழகம்

- Advertisement -spot_img

Trending News