Maharaja preview show twitter review: விஜய் சேதுபதி இப்போதான் தமிழ் சினிமாவுக்குள் வந்த மாதிரி தெரிகிறது. அதற்குள் 50வது படமே நடித்து முடித்து விட்டார். இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுக்கு 25, 50 வது படங்கள் கை கொடுக்காது. விஜய் சேதுபதி அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறாரா இல்லை வரலாறை மாற்றி எழுதி இருக்கிறாரா என ட்விட்டர் விமர்சனத்தின் மூலம் பார்க்கலாம்.
மகாராஜா படம் நேற்று பிரிவியூ போடப்பட்ட நிலையில் பெரும்பாலாக பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோவாக ஜெயித்து விட்டதாக பல இணையவாசிகளும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கேரக்டர்கள் நடிக்கிறேன் என்ற பெயரில் விஜய் சேதுபதி தொடர்ந்து தன்னுடைய இமேஜை எடுத்துக் கொண்டு இருந்தார். நீங்கள் வருசத்துக்கு 10 படம் எல்லாம் கொடுக்கத் தேவையில்லை, மகாராஜா மாதிரி தரமான ஒரு படத்தை வருஷத்துக்கு ஒரு தடவை கொடுத்தால் போதும் என விஜய் சேதுபதியின் ரசிகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த வருடத்தில் வெளியான படங்களில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தரமான படம். பெரிய ஹீரோ இமேஜ் இருந்தாலும் தன்னால் நார்மலான ஒரு கேரக்டரில் நடிக்க முடியும் என்பதை விஜய் சேதுபதி நிரூபித்து இருக்கிறார். பாலிவுட் நடிகர் அனுராக் மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகர் என இந்த படத்தின் மூலம் நிரூபித்து இருக்கிறார். இரண்டாவது பகுதியில் சதுரங்க வேட்டை பட நடிகர் நடராஜன் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்று மகாராஜா படத்தின் பிரிவ்யூ பார்த்த ரசிகர் ஒருவர் விமர்சனம் தெரிவித்திருக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு மகாராஜா படம் தரமான 50 ஆவது படம். இதுவரை இந்த ஆண்டில் ரிலீஸ் ஆன படங்களில் சிறந்த படம் இதுதான். இயக்குனர் நித்திலன் இயக்கம் மற்றும் திரைக்கதையில் தன்னுடைய சிறந்த வேலையை காட்டி இருக்கிறார். இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு சினிமா ரசிகர்கள் மிஸ் பண்ண கூடாது என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
என்னதான் காசு கொடுத்து படம் பார்க்க வச்சாலும் அவங்க விமர்சனங்கள் உண்மையா என்பதை ரசிகர்கள் நாளை தியேட்டரில் வந்து பார்த்தால் தான் தெரியவரும்.