செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

வில்லன ஹீரோவா, காமெடியன வில்லனா மாற்றிய மகாராஜா.. இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் மிருக நடிகர்

Super Hit: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. இந்த படத்தில் விஜய் சேதுபதி மகாராஜாவே வலம் வந்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பின் இந்த படம் அவருக்கு ஹிட் லிஸ்டில் சேர்ந்துள்ளது. விடுதலை படத்திற்கு அப்புறம் விஜய் சேதுபதி இந்த படத்தில் மக்களை கவர்ந்து விட்டார்.

நித்திலன் சாமிநாதன் தனக்கு உண்டான தனித்துவமான பாணியிலேயே இந்த படத்தை மிரட்டி விட்டார். கன கச்சிதமாக திரை கதையில் தெறிக்க விட்டிருக்கிறார். எல்லா படங்களைப் போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் படம் என்றாலும் ,கொடுத்திருக்கும் விதம் அட்டகாசம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியை தவிர அனுராக் காஷ்யப், பாரதிராஜா, நட்டி நடராஜ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, போன்றவர்கள் நடித்துள்ளனர். இமைக்கா நொடியில் வில்லனாக நடித்த அனுராக் இந்த படத்தில் நடிப்பில் தன்னுடைய முத்திரையை பதித்து விட்டார்.

யாருமே எதிர்பார்க்காத வில்லன் கதாபாத்திரத்தில் இதில் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கியமான வில்லனே அவர்தான். மொத்த மக்களும் வெறுத்து ஒதுக்கும்படியான மோசமான கதாபாத்திரத்தில் ஒரு காமெடியனை போட்டு சம்பவம் செய்திருக்கிறார் நித்திலன்.

இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் மிருக நடிகர்

எல்லா படத்திலும் வில்லனாகவே வரும் நட்டி நடராஜ் இதில் சற்று மாறுபட்டு நல்ல கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். ஆரம்பத்தில் அவரை வில்லன் போல் காட்டினாலும் நியாயத்திற்காக நல்லது செய்யும் போலீஸ்காரராக மாறிவிடுவார். இப்படி வில்லன் நட்டியை நல்லவராக, காமெடியன் சிங்கம்புளியை மிகவும் மோசமான வில்லனாக கட்டி இருக்கிறார் இயக்குனர்.

கடைசி இருபது நிமிடம் மக்களை ஆணி அடித்தார் போல் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விட்டார் இயக்குனர் நித்திலன். கடைசியில் வில்லனை மன்னித்து விஜய் சேதுபதி கொடுக்கும் வலி அவரை தற்கொலை செய்து கொள்ள வைத்து விடும். இடைவேளையில் வரும் கூஸ்பம்ஸ் சீன் தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறது.

- Advertisement -spot_img

Trending News