செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

TVK திட்டத்தை காலி பண்ண மாணவர்களை குறி வைக்கும் DMK.. ஆயத்தமாக முன்னெடுக்கும் நான் முதல்வன் திட்டம்

TVK and DMK: பொதுவாக இங்கே ரெண்டே ரெண்டு கட்சிகள் தான் மோதிக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் மாத்தி ஜெயித்துக் கொண்டு வந்தார்கள். ஒரு முறை DMK ஜெயித்தால் அடுத்த முறை ADMK கட்சி ஜெயித்து விடும். காரணம் இந்த முறை DMK ஓட்டு போட்டு ஏதாவது மாற்றம் நடைபெறுகிறதா என்று பார்ப்போம் என மக்கள் நினைப்பார்கள்.

ஆனால் இது நடக்கிறதோ இல்லையோ அடுத்த முறை ADMK-க்கு ஓட்டு போட்டு அதுல என்ன நல்லது நடக்கும் என்று பார்ப்போம் என மாத்தி மாத்தி மக்கள் அவர்களுடைய ஓட்டுக்களை போட்டு வந்தார்கள். அந்த வகையில் வலுவான கட்சி என்று இரண்டு மட்டும் சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் ADMK கட்சி துவண்டு போய்விட்டது.

போட்டி போட்டு மோதிக் கொள்ளும் TVK மற்றும் DMK

இதனால் ஒன் மேன் ஆர்மியாக DMK ஜெயித்து விட்டது. தற்போது ஒரு வலுவான கட்சியை ஆரம்பிக்கும் விதமாக விஜய் அவருடைய சினிமாவை விட்டு ஒதுங்கி முதன்முறையாக தமிழக வெற்றி கழகத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதனால் வருகிற 2026 ஆம் ஆண்டு ஒரு தரமான யுத்தம் நடக்கும் என்பதற்கு ஏற்ப விஜய் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் மாணவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஊட்டும் விதமாக அவர்கள் கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெற்ற மார்க் அடிப்படையில் அவர்களுக்கு பரிசுகளையும் ஊக்க தொகைகளையும் வழங்கி வருகிறார். அதே மாதிரி இந்த ஆண்டும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கப் போகிறார். இப்படி ஒரு பக்கம் விஜய் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு காய் நகர்த்தி வருகிறார்.

அதே மாதிரி DMK கட்சியிலிருந்து முக ஸ்டாலின் அவர்களும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை வழங்க முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது எங்கு பார்த்தாலும் அதிநவீன டெக்னாலஜி தான் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் AI டெக்னாலஜி இருந்தால் போதும் உலகமே நம் கைக்குள் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு புதுமையான விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சியை ORACLE நிறுவனத்துடன் கூட்டணி வைத்து மாணவர்களை குறி வைக்கிறார். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வரை படித்து கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளார்.

இது சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் மாநில அளவில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறார். இதுபோன்று மாணவர்களை குறி வைக்கும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் அதை ஒவ்வொன்றாகவும் அமலுக்கு கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதை செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் பார்க்கும் பொழுது TVK திட்டத்தை காலி பண்ணும் விதமாக இருக்கிறது. ஆனாலும் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் அவருடைய சொந்த பணத்தை வைத்து செய்து வருவது மிகவும் பாராட்டக்கூடியதாக இருக்கிறது. ஆனால் முக ஸ்டாலின் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் தமிழக அரசு கட்சி பணத்தில் இருந்து வாரி கொடுக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News