செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

தடம் தெரியாமல் போன 3 தயாரிப்பு நிறுவனங்கள்.. ரஜினியோடு கடைசி படத்தால் மூடிய பரிதாபம்

3 production companies that have gone missing: ஒரு படத்திற்கு மிகப்பெரிய அஸ்திவாரமாக இருப்பது அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான். இயக்குனர்கள் கதையையும், நடிகர்களின் நடிப்பையும் நம்பி படம் மக்களிடம் எப்படி போய் சேரும் என்று தெரியாத நிலையில் ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுத்து பணத்தை வாரி இறைக்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு சில நேரம் லாபமும் வந்திருக்கிறது. அதே நேரத்தில் சொல்ல முடியாத அளவிற்கு நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது.

அப்படி சில தயாரிப்பார்கள் லாபத்தை பார்க்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்ததால் தடம் தெரியாமலேயே காணாமல் போய்விட்டார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

காணாமல் போன தயாரிப்பு நிறுவனம்

ஏவிஎம்: ஒரு காலத்தில் வாய்ப்பு வேண்டுமென்றால் அனைவரும் போய் நிற்கக்கூடிய இடம் என்றால் ஏவிஎம் ஸ்டுடியோ தான் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு பல நடிகர்களையும் இயக்குனர்களையும் வளர்த்து விட்டிருக்கிறது. ஏவிஎம் சரவணன் பழங்கால தயாரிப்பாளர்களில் ஒருவர். 1945 ஆம் ஆண்டு புகழ் பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனால் நிறுவப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது. ரஜினி, சிவாஜி, கமல் மற்றும் பல முக்கிய நடிகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நிறுவனம் கடைசியாக 2014 ஆம் ஆண்டு 175வது படத்துடன் முடித்துக் கொண்டது.

தேவர் பிலிம்ஸ்: அந்த காலத்தில் எக்கச்சக்கமான படங்களை தயாரித்திருக்கிறது இந்த நிறுவனம். முக்கியமாக இவர் விலங்குகளை கொண்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரபலமாகி இருக்கிறார். அந்த வகையில் எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்திருக்கிறார். கடைசியாக இவர் தாய் மீது சத்தியம் என்ற ரஜினி படத்தை இவருடைய பேனரில் தயாரித்தார். அதன் பின் இவருடைய மறைவிற்கு அடுத்து இவரின் மருமகன் பல படங்களை தயாரித்து வந்தார். அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்கள் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் கடைசியாக ரஜினிக்கு தர்மத்தின் தலைவன் என்ற படத்தை கொடுத்த நிலையில் இந்த நிறுவனம் மூடிவிட்டது.

கவிதாலயா: இந்த நிறுவனம் 1981 ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் தயாரித்திருக்கிறது. முக்கியமாக தொலைக்காட்சி மூலமாக பல சீரியல்களை எடுத்து வெற்றியைக் கண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நிறுவனம் கடைசியாக அர்ஜுனை வைத்து திருவண்ணாமலை மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த குசேலன் படத்தையும் எடுத்து வெற்றி பெறாததால் அப்படியே மூடிவிட்டார்கள்.

- Advertisement -spot_img

Trending News