Maharaja Collection: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் மகாராஜா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், பாரதிராஜா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
அது மட்டுமின்றி ட்ரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. அது எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் விதமாக இருந்த இப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அதனாலேயே தற்போது மகாராஜா கஜானாவை நிரப்பி இருக்கிறார். அந்த வகையில் முதல் நாளில் இந்திய அளவில் இப்படம் 4.5 கோடிகளும் உலக அளவில் 7 கோடிகளையும் வசூலித்திருந்தது.
மகாராஜா வசூல் ரிப்போர்ட்
இது ஒரு நல்ல ஓப்பனிங் ஆக அமைந்த நிலையில் இரண்டாவது நாளான சனிக்கிழமை 12 கோடி வரை வசூல் ஆகி இருந்தது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று இப்படம் 9 கோடிகளை வசூலித்துள்ளது.
ஆக மொத்தம் இந்த மூன்று நாளில் 28 கோடிகள் வரை வசூல் ஆகி இருக்கிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதை வைத்து பார்க்கும் போது விரைவில் படம் 50 கோடியை நெருங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
Vijay Sethupathi
Sundar c
Soori
Aranmanai 4(Collection 100c)
Garudan (Collection 44c)
Maharaja(3rd day 28c)
முன்னதாக சுந்தர் சியின் அரண்மனை 4 வெளியாகி 100 கோடி வரை வசூலித்திருந்தது. ஆனால் அப்படம் 3 நாளில் 20 கோடிகளை மட்டுமே வசூலித்தது. அதை வைத்து பார்க்கும் போது மகாராஜாவுக்கு ஆரம்பமே அசத்தலான வசூல் கிடைத்துள்ளது.
அதேபோல் சூரியின் நடிப்பில் வெளியான கருடன் 48 கோடிகள் வரை வசூலித்திருக்கிறது. இப்படியாக கோலிவுட் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.