Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாக வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி, விஜயா தன்னுடைய வழியில் குறுக்கிட கூடாது என்பதற்காக மாமியாரை திசை திருப்புவதற்காக பரதநாட்டியம் கிளாஸ் நடத்துங்கள் என்று கோர்த்து விட்டார். உடனே விஜயாவும், இது நல்ல யோசனையாக இருக்கிறது. நாமும் பரதநாட்டியம் கிளாஸ் நடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து மீனாவை விட ஒரு படி மேலே சம்பாதித்து காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதற்காக விஜயா அவருடைய தோழி பார்வதி வீட்டில் நடனம் ஆடும் கிளாஸ் ஆரம்பித்து விட்டார். ஆனால் ஆரம்பித்ததில் இருந்து யாருமே வரவில்லை என்று கவலையில் புலம்புகிறார். இதனை பார்த்த முத்து, அம்மாவின் கவலையை போக்குவதற்காக மீனாவை கூட்டிட்டு பரதநாட்டிய கிளாசில் சேர்த்து விட போய்விட்டார். இவர்களைப் பார்த்து அதிர்ச்சியான விஜயா, இந்த மீனாவுக்கு எல்லாம் என்னால சொல்லிக் கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தார்.
மீனாவிடம் இருந்து தப்பி ஓடிய ரோகினியின் மாமா
உடனே மீனா எனக்கும் பரதநாட்டியம் தெரியும் அத்தை. ஆனால் அதை முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை. அதனால் தயவு செய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று கேட்கிறார். பிறகு விஜயா தயங்கிய நிலையில் முத்து, மீனா, பார்வதி அனைவரும் சேர்ந்து பரதநாட்டியம் ஆடி விஜயாவை ஆட வைத்து விட்டார்கள். அப்பொழுது விஜயா மற்றும் மீனா இருவரும் சேர்ந்து ஆடிக் கொண்டிருக்கும் பொழுது விஜயா கழுத்தில் சுளுக்கு பிடித்து விட்டது.
உடனே அம்மாவை பத்திரமாக முத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கே விஜயாவின் தோழி பார்வதி சுளுக்கு எடுத்து விடுவதற்காக ஒரு நபரை கூட்டிட்டு வந்து விஜயாவிற்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார். அவரும் சுளுக்கு எடுத்து விட்டு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பின்பு என்னுடைய இந்த நிலைமைக்கும் இந்த மீனாதான் காரணம் என்று மீனாவை குறை சொல்கிறார்.
இதை எல்லாம் தொடர்ந்து மீனா வழக்கம் போல் பூவை டெலிவரி பண்ணுவதற்காக ஸ்கூட்டரில் போய் கொண்டு இருக்கிறார். அப்பொழுது எதேர்ச்சியாக ரோகிணியின் மாமாவாக நடித்துவரும் பிரௌன் மணியை பார்த்து விடுகிறார். பிரவுன் மணியும் மீனாவை பார்த்து இந்த பொண்ணு ரோகினி வீட்டில் இருக்கும் பொண்ணாச்சே., இவள் கண்ணில் பட்டுவிட்டால் மாட்டி விடுவோமே என்று அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார்.
அப்பொழுது மீனா, இவர் கல்கத்தாவில் இருப்பதாக தான ரோகினி சொன்னார். ஆனால் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறார். பிறகு இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லிய நிலையில், முத்து எனக்கும் அவர் மீது சந்தேகம் இருந்தது. ஏதோ தப்பாக தெரிகிறது என்று பிரவுன்மணியை கண்டுபிடிப்பதற்காக அந்தத் தெருவுக்கு வந்து சிசிடிவி கேமரா மூலம் பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எது எப்படியோ ரோகிணி மாட்டுவதற்கு ஒரு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது. அந்த வகையில் கூடிய விரைவில் மீனா மற்றும் முத்துவிடம் ரோகிணி மாட்டி கொள்வார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்
- 500 எபிசோடு தாண்டியும் முத்துவை டம்மியாக்கிய ரோகினி
- விஜயாவை தூண்டிவிட்டு அவமானப்படுத்திய ரோகினி
- ரோகிணியை பிளாக்மெயில் பண்ணிய தினேஷை துரத்தும் முத்து