வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

எதிர்நீச்சலை க்ளோஸ் பண்ண சன் டிவி மாறன் சொன்ன விஷயம்.. உண்மையை போட்டு உடைத்த அப்பத்தா

Reason for Ethirneechal Closed: எதிர்நீச்சல் சீரியல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிருந்தாலும் இன்னும் பலரின் கண்கள் எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவையும், எபிசோடையும் பார்ப்பதற்கு தேடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த அளவிற்கு சன் டிவியில் ஒரு தரமான சீரியலாக எதிர்நீச்சலின் கதை அமைந்தது. எதார்த்தமான நடிப்பும், வசனங்களும், கதையும் மக்களை கவர்ந்து குடும்பத்துடன் பார்க்கும் படியாக ஒரு பெயரை சம்பாதித்தது.

அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பு பலரையும் விரும்பி பார்க்க வைத்தது. அதனால் தான் ஆண்கள் முதற்கொண்டு விரும்பி பார்க்கும் சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மறைவிற்குப் பிறகு நாடகமே தலைகீழாக மாறிவிட்டது.

ஆதங்கத்தை வெளிப்படுத்திய அப்பத்தா

அந்த வகையில் மாரிமுத்துவின் இறப்பு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலின் மொத்த டீமுக்கும் பேர அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து எப்படி நாடகத்தை கொண்டு போக வேண்டும் என்று ஒரு ஐடியாவே இல்லாமல் கண்ணை கட்டி காத்துல விட்ட மாதிரி இருட்டாவே இருந்திருக்கிறது. அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வேலராமமூர்த்தி நடிப்பு மக்களுக்கு ஒரு அதிருப்தியை கொடுத்தது.

ஆனாலும் போகப் போக அவருடைய நடிப்பை ஏற்றுக்கொண்டு போனாலும் கதை அனைத்தும் நெகட்டிவாக நகர்ந்து வருகிறது என்று மக்கள் கமெண்ட்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் பின்னடைவை சந்தித்து விட்டது. இதையெல்லாம் பார்த்த பிறகு சன் டிவி சேனல் தரப்பில் இருந்து மாறன் அனுப்பிய மெயில் என்னவென்றால் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி யில் சற்று அடி வாங்கிவிட்டது.

அதனால் இனி எதிர்நீச்சல் சீரியலுக்கு பிரைம் டைம் கிடையாது என்று மெயில் அனுப்பி இருக்கிறார். இதனை பார்த்த இயக்குனர் திருச்செல்வம் அப்படி என்றால் இந்த நாடகத்தை இனி தொடர வேண்டாம் என்று முடிவு பண்ணி கதையை க்ளோஸ் பண்ணி விடலாம் என்று நினைத்து விட்டார். இதை நாடகத்தில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களுக்கு தெரியப்படுத்தாத நிலையில் கிளைமாக்ஸ் எழுதிய பிறகு தான் திருச்செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியப்படுத்தினார்.

அப்பொழுதே இதில் நடித்த ஆர்டிஸ்ட்கள் ஒவ்வொருவரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ரொம்பவே கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்களை எல்லாம் தேற்றி ஒரு நம்பிக்கையை கொடுத்து நல்லபடியாக வழி அனுப்பி வைத்தது திருச்செல்வம் தான். இன்னும் வரை எங்களாலையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நாடகம் முடிந்து விட்டது என்று. அதனால் தான் எங்களை எல்லாத்தையும் கௌரவிக்கும் விதமாக 750 எபிசோடு முடிந்து விட்டதற்காக பாராட்டு சான்றிதழை திருச்செல்வம் வழங்கி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் திருச்செல்வம் மற்றொரு நாடகத்தின் மூலம் வருவார். ஆனாலும் இந்த மாதிரி ஒரு கூட்டணி, கதை கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்று எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கேரக்டரில் நடித்த பட்டம்மா சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருடைய ஆதங்கத்தையும் சேர்த்து எதிர்நீச்சல் சீரியல் க்ளோஸ் பண்ணின காரணத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசிய சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News