Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் மருமகளாக வந்த பிறகுதான் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பொறாமைகள் வந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் ஊம குசும்பாக இருந்து மாமனார் பாண்டியனிடம் கொளுத்தி போடும் வேலைகளை தங்கமயில் பார்த்து வருகிறார். அதாவது ராஜி டியூஷன் எடுப்பது தனக்கு எந்த விதத்திலும் பிரச்சினையாகி விடக்கூடாது என்ற காரணத்தினால் ராஜி டியூஷன் எடுப்பதை தடுத்தாக வேண்டும் என்று நினைக்கிறார்.
அந்த வகையில் தங்கமயிலின் அம்மா பாக்கியம் கொடுத்த ஐடியா பாண்டியனிடம் ராஜி டியூஷன் எடுப்பது தப்பு என்கிற மாதிரி பேசி அவர் மனதில் ராஜி மீது கோபத்தை ஏற்படுத்திவிடு என்று சொல்லி இருக்கிறார். அதன்படி தங்கமயில், யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியனிடம் ராஜி டியூஷன் எடுப்பதை தவறாக சொல்லி இது தெரிந்தால் ராஜி குடும்பம் உங்களை தவறாக பேசுவார்கள் என்பதை கூறிவிட்டார்.
ஓவராக அராஜகம் பண்ணும் பாண்டியன்
இதை எதர்ச்சியாக வெளியில் இருந்து கதிர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோமதி மற்றும் ராஜி கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் பாண்டியன், என்னமோ ராஜி கொலை குத்தம் பண்ண மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஓவராக சண்டை போட்டு அனைவரையும் காயப்படுத்தி பேசிவிட்டார்.
அந்த நேரத்தில் ராஜிக்காக சப்போர்ட் பண்ணி பேசிய கதிரையும் வம்படியாக திட்டிவிட்டு ஓவர் அராஜகமாக நடந்து கொண்டார். இதையெல்லாம் பார்த்த சரவணன் சப்போர்ட் பண்ண வரும் பொழுது தங்கமயில் பேசாமல் இருங்கள் என்று அடக்கி விட்டார். பிறகு ராஜி அழுது கொண்டே இருந்த நிலையில் கோமதி அவரை சமாதானப்படுத்தி மாமா இடம் நான் பேசுகிறேன். நீ இதெல்லாம் நினைத்து கவலைப்படாதே என்று சொல்கிறார்.
அதே மாதிரி கதிரும், ராஜியை சமாதானப்படுத்தி நீ எதை நினைச்சும் பீல் பண்ணாத. நீ நல்லா படிச்சு நல்ல ஒரு வேலையில் சேர்வது தான் எனக்கு ரொம்ப சந்தோசம். அதனால் இதையெல்லாம் நினைத்து நீ வருந்தாதே என்று ஆறுதலாக பேசுகிறார். பிறகு கதிர் வெளியே போகும் பொழுது வாசலில் இருந்த தங்கமயில் எதற்கு உங்க பிரெண்ட்ஸ் பைக்கை வாங்கி பயன்படுத்துகிறீர்கள்.
இதற்கு பேசாமல் உங்க அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு உங்க பைக்கை கேட்டு வாங்க வேண்டியது தானே என்று கூறுகிறார். உடனே இதெல்லாம் இருக்கட்டும் தேவையில்லாமல் ஏன் ராஜி விஷயத்தில் நீங்கள் தலையிடறீங்க என்று கதிர் கேட்கிறார். அதற்கு தங்கமயில் நான் இந்த குடும்பத்தில் உள்ள ஒருவர் கிடையாதா, எனக்கு எந்த உரிமையும் இல்லையா என்று கேட்கிறார்.
உடனே கதிர், நான் அப்படி சொல்லவில்லை ராஜி டியூஷன் எடுப்பது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். அதை எதுக்கு நீங்கள் அப்பாவிடம் சொல்லி தேவை இல்லாமல் அப்பாவை கோபப்படுத்தி ஒரு பிரச்சினையை உண்டாக்குகிறீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் ராஜியே வந்து அப்பாவிடம் சொல்லி சம்மதத்தை வாங்கி இருப்பார்.
பிரச்சனையும் இந்த தூரத்துக்கு போயிருக்காது. இனிமேலாவது உங்க வேலையை மட்டும் பாருங்கள் என்று தங்கமயிலிடம் கூறிவிட்டார். அத்துடன் இப்பொழுதுதான் அண்ணி தங்கமயில் கிட்ட ஏதோ ஒரு தப்பான விஷயம் இருக்கிறது என்று கதிருக்கு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதை கொஞ்சம் யோசித்து செய்தால் தங்கமயில் பற்றிய உண்மையான விஷயம் தெரிய வந்துவிடும்.
இதனைத் தொடர்ந்து மீனா ட்ரைனிங் சீக்கிரமாக முடிந்துவிடும், அதனால் நம் இருவரும் சேர்ந்து வெளியே சுற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு டிரஸ் வாங்கிட்டு போகலாம் என்று பிளான் பண்ணி சந்தோஷப்பட்டு கொள்கிறார். உடனே செந்திலும் இன்னைக்கு முழுவதும் நான் உன் கூட தான் இருப்பேன். நீ ஆசைப்பட்டபடி எல்லா பக்கமும் போகலாம் என்று கூறுகிறார்.
பிறகு மீனா போன கொஞ்ச நேரத்திலேயே செந்திலுக்கு பாண்டியன் போன் பண்ணி பல வேலைகளை சொல்லி கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று பாண்டியன் ஆர்டர் போடுகிறார். இந்த சூழ்நிலையில் செந்தில், அப்பா பேச்சை மீற முடியாமல் வேலை விஷயமாக வெளியே போக ஆரம்பிக்கிறார். இதனால் ட்ரெயினிங் முடித்துவிட்டு ரூம் திரும்பிய மீனா, செந்திலை காணவில்லை என்று ரொம்பவே கோபப்படுகிறார்.
அத்துடன் வீட்டிற்கு திரும்பும் மீனா, பாண்டியனிடம் மொத்த கோபத்தை காட்டும் விதமாக மனதில் பட்ட அனைத்து விஷயங்களையும் சொல்லி பாண்டியனுக்கு ஒரு பாடத்தை கற்பித்தால் அவருடைய ஆணவம் கொஞ்சமாவது அடங்க வாய்ப்பு இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்
- ராஜிக்கு எதிராக பாண்டியனிடம் பேசிய தங்கமயில்
- மருமகள் பேச்சை கேட்டு பொண்டாட்டியை வெளுத்து வாங்கும் பாண்டியன்