Vijay Best Dialogues: சினிமாவிற்கு அப்பாவின் சப்போர்ட்டில் நுழைந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி நிலைத்து நிற்க வேண்டும் என்று விஜய் ஆசைப்பட்டார். அதனால் ஆரம்பத்தில் நடித்த படங்கள் மூலம் துவண்டு போனாலும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் நடித்து விஜய் என்ற அங்கீகாரத்தை நிலை நிறுத்தி விட்டார். அத்துடன் தொடர்ந்து நடித்த படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து இளைய தளபதி என்ற பட்டத்தை தூக்கி விட்டார்.
இதனை தக்க வைத்துக் கொள்ள வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அந்த வகையில் இவருடைய தலையெழுத்தை மாற்றும் விதமாக அட்லி இயக்கத்தில் கூட்டணி வைத்த மெர்சல் படத்திலிருந்து இளைய தளபதியை தூக்கிவிட்டு தளபதி என்ற பட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். அந்த அளவிற்கு படத்திற்கு படம் புகுந்து விளையாடி மக்கள் மனதை வென்று விட்டார்.
இன்று ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். முக்கியமாக எப்பொழுது அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்தாரோ, அப்பொழுது இருந்து அவருடைய படங்களில் தமிழ்நாட்டு மக்கள் எந்த ஒரு விஷயத்தில் பாதிப்படைந்து இருக்கிறார்களோ அதை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டும் விதமாக அந்த காட்சிகளை வைத்து அரசியலுக்கும் அடித்தளம் அமைத்து விட்டார்.
அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்த தளபதியின் வசனங்கள்
இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது தான் ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டு அன்போடு இவரை ஆட்சி செய்ய ஆசைப்பட்டார்கள். அதற்கு ஏற்ற மாதிரி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழக கட்சியினை ஆரம்பித்து அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விட்டார். இதற்கிடையில் இவர் நடித்த படங்களில் மக்களை கவர்ந்த பத்து வசனங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
கத்தி: இப்படத்தில் விவசாயம் பண்ணுவதற்கு கடன் வாங்கின விவசாயி கடன் கட்ட முடியாமல் பூச்சி மருந்து குடித்து சாகும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் அரசாங்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் தட்டிக் கேட்ட இப்படத்தின் வசனங்கள் மக்களிடம் மிகப்பெரிய கைத்தட்டலை பெற்றது.
மெர்சல்: இதில் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு செய்யும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் விதமாக தனியார் மருத்துவமனை கொள்ளை, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை சொல்லி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.
சர்க்கார்: அதிமுக கட்சியால் தொடர்ந்து விஜய் படத்துக்கு குடைச்சல் வந்த நேரத்தில் கிட்டத்தட்ட 10 வருடமாக போராடி இருக்கிறார். அந்த வகையில் சர்க்கார் படத்தில் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் படம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது இலவசங்களை கொடுத்து மக்களை மயக்குவது தவறானது என்ற ஒரு கண்ணோட்டத்தை முன்னிறுத்தி காட்டி இருப்பார். அத்துடன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் கூறியது என்னவென்றால் இந்த படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை, முதலமைச்சராக நடிக்கவும் மாட்டேன் என்று சொல்லி ரசிகர்களுக்கு மறைமுகமாக கட்சியை நிலை நிறுத்தி காட்டி இருக்கிறார்.
பிகில்: இப்படத்தில் திறமை இருந்தாலும் ஒதுக்கப்பட்ட மக்கள் வெற்றியை தொட்டு விடக்கூடாது என்று விளையாட்டு துறையில் நடக்கும் குளறுபடிகளை தட்டி கேட்கும் விதமாக கேப்டன் மைக்கேல் என்பதை சிஎம் என சுருக்கி வைத்துக்கொண்டு அரசியலுக்கு அடித்தளம் போடும் வகையில் அநீதிகளை தட்டி கேட்டிருக்கிறார்.
மாஸ்டர்: இதில் சட்டத்திற்கு விரோதமாக விற்கும் போதைப்பொருள் கும்பலை தட்டிக் கேட்கும் விதமாகவும், பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு அவர்கள் அணியும் அரைகுறை ஆடை தான் தவறு என்று சுட்டிக் காட்டுவதை சொல்லும் விதமாக இப்படத்தின் காட்சிகளில் பேசப்பட்டிருக்கும்.
பீஸ்ட்: இப்படத்தில் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தால் என்ன வேணாலும் பண்ணலாம் என்று நினைக்கும் மேலதிகாரிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் விதமாக மால் ஹைஜாக் விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு பதவியில் இருப்பவர்களை செல்லாக்காசாக ஆக்கும் விதமாக பேசிய வசனங்கள் நடித்த காட்சிகள் அனைத்தும் அடிபொலியாக இருக்கும்.
லியோ: இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய், நான் முதலமைச்சராக ஆன பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜை போதைப்பொருள் ஒழிப்புத்துறை அமைச்சராக நியமித்து ஒழுங்கு முறையான சட்டத்தை மேற்கொள்வேன் என்பதே முன்னுறுத்தி காட்டும் விதமாக வசனங்களை தெறிக்க விட்டிருக்கிறார்.
இப்படி அரசியல் பயணத்திற்கு அஸ்திவாரம் போட்ட நிலையில் படத்துக்கு படம் வெறித்தனமான வசனங்களை தெறிக்க விட்டு தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மூலம் படையெடுத்து வருகிறார்.
கில்லி: எந்த ஏரியா அந்த ஏரியா இந்த இடம் அந்த இடம் எங்குமே எனக்கு பயம் கிடையாது, என கில்லி படத்தில் விஜய் சொல்லும் டயலாக் ஏற்ப எல்லா இடத்திலும் தன்னுடைய துணிச்சலான பயணத்தை தொடங்கி விட்டார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி வருகிறார்.
நண்பன்: வெற்றிக்கு பின்னாடி போகாத, உனக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் உன்னுடைய திறமையை வளர்த்துக்கோ வெற்றி உன் பின்னால் வரும் என்று சொல்லும் டயலாக் மூலம் வேலை இல்லாதவர்கள், வெற்றி பெறாத மாணவர்கள் போன்ற பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். அந்த வகையில் நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த வசனத்தை பேசி இருக்கிறார்.
குருவி: கடைசியில் விஜய் ஒரு அமைதியானவர், அவர் அரசியலுக்கு வந்து என்ன பண்ணிடுவார் என்று எதிர்மறையாக வந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும், ஆனா அடி சரவெடியாக இருக்கும் என்று அனைத்து பிரச்சனைகளையும் தட்டிக் கேட்கும் விதமாக எடுத்து வைக்கும் பாதைகளை சுட்டிக்காட்டி விட்டார்.
ஆக மொத்தத்தில் அனைத்து விஷயங்களுக்கும் ஆல் இஸ் வெல் என்று சொல்லி தொடர்ந்து வெற்றியை பார்த்துக்கொண்டு வருகிறார். TVK ” AM Waiting 2026″