வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வீட்டிலே வேலை திட்டம்.. இனி புலம்பாதீங்க! வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க

Job Opportunity: என்னதான் படிச்சாலும் நம்ம தலையெழுத்து என்ன இருக்கோ அதை மாற்ற முடியாது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையோ இல்லையோ தெரியல ஆனா படித்தவர்களுக்கு ஏற்ற வேலை இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதிலும் இன்ஜினியரிங் படித்தால் அஞ்சுக்கும் பத்துக்கும் திண்டாடும் நிலைமை தான் ஏற்படும் என்று சொல்வார்கள்.

இப்படி படித்த படிப்புக்கு வேலை இல்லை என்று பல எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் அனைவரும் இன்ஜினியரிங் படிப்பது தான் முக்கிய குறிக்கோளாக படித்து வருகிறார்கள். அதற்கு காரணம் படித்து முடித்துவிட்டு ஒரு வேளை அதற்கான சிறந்த வேலை கிடைத்துவிட்டால் அவர்கள் தான் ராஜாவாக ஜொலித்து நினைத்த காரியத்தை அடைந்து விடுவார்கள்.

மைக்ரோசாப்ட் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யவும்

அந்த வகையில் தற்போது இன்ஜினியரிங் படித்தவர்கள் இன்னைக்கு கவலப்படவே தேவையில்லை. அதுவும் இப்ப இருக்கிற ட்ரெண்டிங் ஏற்ப வீடு தேடியே வேலை வாய்ப்பு வருகிறது. அதாவது அமெரிக்காவை தலைமை இடமாக வைத்து முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவிலும் முக்கிய நிறுவனங்களின் கிளைகளை வைத்துள்ளது.

அதில் பெங்களூ, ஹைதராபாத், நொய்டா போன்ற இடங்களில் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் யார் என்றால் இளங்கலை பட்டப்படிப்பான கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்தவர்கள் அல்லது இது தொடர்புடைய துறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ஆனால் இதை விண்ணப்பம் செய்வதற்கு கண்டிப்பாக சி, சி++, கோடிங் லாங்குவேஜில் குறைந்தது இரண்டு ஆண்டு வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் சாப்ட்வேர் டெவலப்பிங் அனுபவம் இருந்திருக்க வேண்டும். விண்டோஸ் அல்லது லீனெஸ் ஆபரேடிங் சிஸ்டம் பற்றியும் டிஸ்ட்ரிபியூட்டர் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரோஜ் பற்றிய விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல ஆங்கிலத்தில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்தால் உங்களுக்கு நிச்சயம் மைக்ரோசாப்ட் கம்பெனியில் வேலை உறுதி. மேலும் இந்த வேலைக்கான மாத சம்பளம் என்னவென்று கூடிய சீக்கிரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள். மேலும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் வேலையில் சேரப் போகும் நபர்களின் சம்பளம் மாறுபடலாம்.

ஏற்கனவே இந்த வேலைக்கான அறிவிப்பை கடந்த 15ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தகுதி மற்றும் இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் மைக்ரோசாப்ட் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கு கடைசி தேதி எதுவும் இப்பொழுது வரை குறிப்பிடவில்லை. அதனால் முடிந்தவரை விருப்பமுள்ளவர்கள் சீக்கிரமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

அத்துடன் இந்த வேலையில் தேர்வாகும் நபர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ், கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிந்தைய கால விடுமுறை போன்ற முறைப்படி அலுவலகத்தில் கொடுக்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். அது மட்டுமன்றி இந்த வேலை 100% வீட்டிலிருந்து வேலை செய்து கொள்ளலாம். அதனால் திருமணமான பெண்களுக்கு இந்த வேலை ரொம்பவே சரியானதாக இருக்கும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீர்கள்.

வணிகத்தில் ட்ரெண்டிங்காகும் செய்திகள்

- Advertisement -

Trending News