செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

எதிர்க்கட்சிக்கு பயத்தை உண்டாக்கிய தளபதியின் அரசியல்.. மறைமுகமாக சொன்ன ஜேம்ஸ் வசந்த்

James Vasanth about Vijay Politics: விஜய் குழந்தை நட்சத்திரமாக 1984 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் நுழைந்தாலும் ஹீரோவாக 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். அந்த வகையில் 32 வருடங்களாக ஹீரோவாக ஜொலித்து வந்தவர் கிட்டத்தட்ட 68 படங்களில் நடித்து 69 வது படத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று 50வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதன்முறையாக அரசியலிலும் கால் தடம் பதிக்க போகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் கட்சியின் பெயரை அறிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அரசியலில் நுழைந்துவிட்டார். ஆனால் என்னுடைய இலக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கி தான் பயணிக்க போகிறேன். இடைப்பட்ட எந்த தேர்தல்களிலும் யார் கட்சிக்கும் நான் ஆதரவாக இல்லை என்று திட்டவட்டமான முடிவையும் கூறி இருக்கிறார்.

தளபதியின் அரசியல் குறித்து கருத்துக்களை சொன்ன ஜேம்ஸ் வசனம்

இவருடைய முடிவுக்கு பின்னால் இருக்கும் விஷயம் என்னவென்றால் மக்களிடம் எடுத்த உடனேயே எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்க முடியாது. அதனால் முதலில் அவருக்கு என் மீதும், கட்சி மீதும் நம்பிக்கை வர வேண்டும். அதற்கு குறைந்தது ரெண்டு வருடம் அவகாசம் எனக்கு வேண்டும். அதன் மூலம் நான் மக்களுக்கு செய்யும் நல்ல காரியங்கள் அவர்கள் மனதில் என்னை பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்.

அதனால் தான் மாணவர்களின் படிப்பையும் தொலைநோக்குப் பார்வையும் அதிகப்படுத்தும் விதமாக பரிசுகளையும் பாராட்டுகளையும் கொடுத்து ஊக்குவிக்கிறார். வறுமையில் வாடுபவர்களுக்கு பசி இல்லா திட்டத்தையும் கொண்டு வருகிறார். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து இரண்டு வருடத்திற்குள் இவரால் முடிந்தவரை பல நல்ல விஷயங்களை செய்து மக்களிடம் நற்பெயரை எடுத்து விடுவார். இப்படி இவருடைய செயல்கள் ஒரு பக்கம் இருக்க இதையெல்லாம் பார்த்து எதிர்க்கட்சியான DMK, ADMK, BJB, Congrass போன்ற அனைத்து கட்சிகளுக்கும் பயத்தை உண்டாக்கும் அளவிற்கு தளபதியின் செயல்கள் சம்பவத்தை உண்டாக்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தளபதி விஜய்யின் அரசியலை பற்றி மறைமுகமாக சில விஷயங்களை நேற்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேசியிருக்கிறார். அதாவது விஜய் அரசியலுக்கு வந்தது வியப்பாகவும் சினிமாவிலிருந்து விலகுவது சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அரசியலுக்கு வந்துள்ள விஜய் இனி வருகிற நெகட்டிவ் விமர்சனங்களையும், சொல்லடிகளையும் தாங்கும் அளவிற்கு அவருடைய மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தேவையான பல மாற்றங்களை விஜய் அரசியல் மூலம் செய்து காட்ட வேண்டும். அதே நேரத்தில் அவருடைய எளிமையான தோற்றத்தை என்றைக்கும் மாற்றிக்கொள்ள கூடாது. அது தான் அவருக்கு மிகப்பெரிய கெத்து. அத்துடன் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான சரியான பாதையை அவர் சீரமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் தவறான ஆலோசர்களை தன்னை சுற்றி வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை முழுமையாக நம்பி இறங்கவும் கூடாது. மேலும் விஜய் நடிகராக எனக்கு அவரைப் பற்றி தெரியும். ஆனால் ஒரு அரசியலில் அவர் எந்த மாதிரியான விஷயங்களை காட்டப் போகிறார் என்பது எனக்கு தெரியாது. அதனால் அதைப் பற்றி எனக்கு தெரிந்தால் தான் ஓட்டு போடற விஷயங்களை முடிவு செய்ய முடியும்.

சினிமாவில் இருந்து விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு என்பது வேற. அரசியலில் நுழைந்த பிறகு அவருக்கு இருக்கும் வரவேற்பு என்பது வேறு. ஏனென்றால் விஜய் பொறுத்தவரை ஜாதி கிடையாது என்றாலும் ரசிகர்களுக்குள் ஜாதி இருக்கிறது. இதனை அவர் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பல மறைமுகமான விஷயங்களை ஜேம்ஸ் வசந்த் பேசியது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தளபதியின் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள்

- Advertisement -spot_img

Trending News