Vijay: விஜய் கடந்த 22ம் தேதி 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு திரைத்துறையில் இருந்து திரிஷா, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பிரபு தேவா, வெங்கட் பிரபு என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களான கமல், சீமான், அன்புமணி ராமதாஸ், மற்றும் பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தனர்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் தற்போது நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரபலங்கள் அத்தனை பேரையும் மதிப்பும் மரியாதையுடனும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் திமுக சார்பாக யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவருக்கு யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் சூப்பர் ஸ்டாரும் விஜய்க்கு ஹாப்பி பர்த்டே சொல்லவில்லை.
விஜய்யின் நன்றி அறிக்கை
ஆளும் கட்சியினர் எதற்காக வாழ்த்து சொல்லவில்லை என்பது அனைவருக்கும் புரிகிறது. ஆனால் ரஜினியின் ஏன் சொல்லவில்லை என ப்ளூ சட்டை மாறன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே இவருக்கு தலைவரை வம்புக்கு இழுப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.
அதேபோல் தான் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காகம் பருந்து கதை பூதாகரமாக வெடித்தது. அதை லியோ விழாவில் விஜய் நாசுக்காக நக்கல் அடித்து பேசி இருந்தார்.
மேலும் ரஜினி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமானவர். இப்படி பல விஷயங்கள் அவர் வாழ்த்து சொல்லாததற்கு காரணமாக இருக்கலாம். இதை குத்திக் காட்டவே விஜய் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஏனென்றால் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என அவர் சாதாரணமாக ஒரு பதிவு போட்டிருக்கலாம். ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் என்றால் நிச்சயம் ஒரு முடிவோடு தான் அவர் இருக்கிறார். ஆக மொத்தம் இனி அடுத்தடுத்து அவருடைய அதிரடியையும் எதிர்பார்க்கலாம்.