ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மீனாவை பற்றி புருஷனிடம் தவறாக போட்டுக் கொடுத்த தங்கமயில்.. பாண்டியனை அடக்கிய கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் ஓவர் ஆட்டம் ஆடுகிறார் என்று கோமதிக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் முதலில் மூத்த மருமகளை ஓரமாக உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக அடுப்பங்கரை பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டார். இது தெரியாத தங்கமயில் வழக்கம் போல் சமைப்பதற்கு வருகிறார்.

ஆனால் அங்கே கோமதி சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்த தங்கமயில் நான் பண்ணுகிறேன் என்று வம்பு பண்ணுகிறார். ஆனால் கோமதி பிடிவாதமாக ஏன் புருஷன், மகன்களுக்கு என்ன வேணும் என்று எனக்குத் தெரியும். இத்தனை வருஷமாக நான் தானே சமைத்து கொடுத்தேன். அதனால் இனியும் என்னால் முடிந்த வரை நான் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னால சும்மா இருக்க முடியவில்லை என்றால் எனக்கு சின்ன சின்ன உதவிகளை பண்ணிக் கொடு என்று தங்கமயில் வாயை அடைத்து விட்டு கெத்தாக கோமதி மாமியார் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ராஜி, கதிருக்கு போன் பண்ணி லேட் ஆகும் என்றால் கதவை திறக்கும் பொழுது எனக்கு போன் பண்ணு. நான் வந்து கதவை திறக்கிறேன் அதை விட்டுவிட்டு கதவை தட்டாதே.

குடும்பத்திற்குள் பிரச்சனை உண்டாக்கப் போகும் தங்கமயில்

பிறகு மாமா வந்து அதுக்கும் சேர்த்து திட்டுவாரு. அதனால தேவையில்லாத வேலை எல்லாம் பண்ண வேண்டாம் என்று கதிருக்கு சொல்கிறார். இதை கேட்ட கதிர் நீ அவ்ளோ நேரம் தூங்காமல் முழித்து இருந்தால் நல்லா இருக்காது. நான் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை. நீ போய் தூங்கு என்று அக்கறையுடன் மாறி மாறி இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

பிறகு கதிர் வீட்டுக்கு வரும்போது பைக் சத்தத்தை கேட்டு ராஜி கதவை திறக்கிறார். ஆனால் திறக்கும் பொழுது பாண்டியன் காதில் சத்தம் கேட்டு விட்டது. உடனே வழக்கம் போல் திட்டுவதற்கு எழுந்த நிலையில் கோமதி, பாண்டியனை தடுத்து வேலை இருந்தால் கொஞ்சம் முன்ன பின்ன ஆக தான் செய்யும். இப்ப போய் தேவை இல்லாம எதுக்கு பிரச்சனை பண்ணுகிறீர்கள்.

நீங்களும் ஆரம்பத்தில் லோடு விஷயமாக வெளியூர் போயிருக்கும் பொழுது லேட்டாக தான வருவீங்க. கதிரை மட்டும் ஏன் தேவையில்லாமல் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறார். ஆனாலும் பாண்டியன் அவன் இப்பொழுதே இந்த மாதிரி பண்ணனும் தேவை இல்லையே என்று கூறுகிறார். அதற்கு கோமதி எதற்கெடுத்தாலும் தண்டம் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று சொன்னால் கோபம் வரதான் செய்யும்.

அதனால்தான் சுயமாக சம்பாதித்து உங்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக வேலைக்கு போகிறான். எனக்கே வேலைக்கு போகணும் சம்பாதிக்கணும் என்று எண்ணம் இருக்கும் பொழுது கதிருக்கு இருக்காதா என்று பாண்டியனை கோமதி கெத்தாக அடக்கி விட்டு தூங்க வைத்து விட்டார். அடுத்ததாக சரவணன் வீட்டிற்கு வந்த நிலையில் வழக்கம்போல் தங்கமயில் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் உங்க அம்மா என்னை வேலை செய்யவிடலை என்று சொல்கிறார். அதற்கு சரவணன் நல்ல விஷயம் தானே நீ உதவி மட்டும் செஞ்சால் போதும் எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கோ என்று சொல்கிறார். பிறகு சாயங்காலம் மீனா கடையிலிருந்து பண்டங்கள் வாங்கிட்டு வந்தார். நான் எதற்கு தேவையில்லாத பொருட்களை வெளியே வாங்குகிறார்கள்.

என்னிடம் என்ன வேணும் என்று கேட்டால் நானே செய்து கொடுப்பேன் என்று சொன்னேன். அதற்கு மீனா நான் சம்பாதிக்கிறேன், என்னிடம் பணம் இருக்கிறது நான் வாங்கிட்டு வருகிறேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று என்னை அவமானப்படுத்தும் விதமாக மீனா பேசி விட்டாள் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் சரவணன் அந்த பிள்ளை மீனா அப்படியா பேசுனது என்று கொஞ்சம் முகம் மாறுகிறது.

இப்படி தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் இருப்பவர்களை போட்டு கொடுத்து சரவணன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் தங்கமயில். இனி அடுத்து தன்னுடைய பொண்டாட்டி யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது என்ற காரணத்திற்காக சரவணன் அனைவரிடமும் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்.

இவரை தொடர்ந்து இனி ஒவ்வொருவரும் ஏதாவது பிரச்சினை வரும்போது எதிர்த்து பேச ஆரம்பிப்பார்கள். அதுவே பாண்டியன் குடும்பத்தில் உள்ள ஒற்றுமை போவதற்கு காரணமாக இருக்கப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News