செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

அலப்பறையை இல்ல, 11 நாளில் கல்கி செய்த வசூல் ரிப்போர்ட்.. மொத்த ரெக்கார்டும் சோலி முடிஞ்சிடுச்சு!

Kalki 2898 AD: ஒவ்வொரு வாரமும் வரிசை கட்டி புதுப்புது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் எந்த படங்கள் மக்களை கவர்ந்திருக்கிறதோ, அது மட்டுமே வசூல் ரீதியாகவும் தொடர்ந்து திரையரங்குகளிலும் ஓடி கொண்டு வருகிறது. அதில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளிவந்த கல்கி 2898 AD படம் வெளியாகி இப்பொழுது வரை 11 நாளை கடந்து இருக்கிறது.

அந்த வகையில் வெளிவந்த ஒவ்வொரு நாளும் வசூல் அளவில் லாபத்தை வாரி குவித்து வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 600 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் போட்ட பட்ஜெட்டையும் தாண்டி வசூல் அளவில் லாபத்தை பார்த்து வருகிறது.

அசால்டாக வசூலை தட்டி தூக்கிய கல்கி

மகாபாரதம் போரில் நடந்த குருசேத்திர போர் முடிவில் கிருஷ்ணனிடம் சாகாவரம் சாபத்தை பெற்ற அஸ்வர்தன் கலிவுலகத்தில் பிறக்கும் கிருஷ்ணனின் பத்தாவது அவதாரத்திற்காக காத்திருக்கிறார். அந்த குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பை கிருஷ்ணன் அஸ்வர்தனிடம் ஒப்படைக்கிறார். அதன்படி கலியுகத்தில் அந்த குழந்தைக்கு வரும் பிரச்சனையை தடுக்கும் விதமாக பல சாகசங்கள் நிறைந்த டிஸ்பியன் அறிவியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பிரபாஸின் நடிப்பை விட அமிதாப்பச்சன் கமலஹாசன் நடிப்பு மக்களை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் கடைசியில் பத்து நிமிடம் மட்டும் தான் பிரபாஸ் ஹீரோ என்பதையும் உணர வைத்திருக்கிறது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் வரும் பிரபாஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதற்கான காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. அதன்படி உலகளவில் இப்பொழுது வரை 900 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே 33 கோடிக்கு மேல் வசூல் ஆகி இருக்கிறது. எந்தவித அலப்பரையும் இல்லாமல் கல்கி வசூல் அளவில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அசால்டாக ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலை தாண்டி, இதுவரை அதிக அளவில் வசூலை பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் ஜவான் படத்தின் ரெக்கார்டையும் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி படத்தின் வசூல் ரிப்போர்ட்

- Advertisement -spot_img

Trending News