சிங்கப்பெண்ணில் அன்பு ஆனந்தி காதலுக்கு மொத்தமாய் ஆப்பு வைத்த அம்மா.. இனி அழகன் யார் என்று தெரிந்தாலும் பிரயோஜனம் இல்ல

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் அழகன் யார் என ஆனந்தி எப்போ தான் தெரிந்து கொள்ளப் போகிறாள் என்று தெரியவில்லை. இந்த ஒரு ட்விஸ்ட்டை வைத்தே பல மாதங்களாக இந்த கதையை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்பாவின் திதிக்கு ஆனந்தி வீட்டுக்கு வந்தபோது அவளிடம் நான்தான் அழகன் என்று சொல்லிவிட வேண்டும் என்று அன்பு திட்டம் போட்டான். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதுவரை அழகன் யார் என்று யாருக்குமே தெரியாத இருந்த நிலையில் தற்போது முத்துவுக்கு தெரிந்திருப்பது தான் ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது.

ஆனந்தி மீது முன்னாடி இருந்த கோபங்கள் எல்லாமே போய் அன்புவின் அம்மாவுக்கு அவர் மீது நல்ல எண்ணம் வந்துவிட்டது. இனி அன்பு போய் ஆனந்தியை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என சொன்னாலும் உடனே ஓகே சொல்லிவிடுவார் என்று தான் நினைத்தோம்.

அழகன் யார் என்று தெரிந்தாலும் பிரயோஜனம் இல்ல

ஆனால் நேத்து எதிர்பாராத ஒரு சஸ்பென்ஸ் நடந்திருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தியை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அன்புவின் அம்மாவிடம் ஆனந்தியை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கி பழகுகிறார்கள், ஆனந்தியை தான் உன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கப் போகிறாயா என்று கேட்கிறார்கள்.

அதற்கு அன்புவின் அம்மா அன்புக்காக அவள் அவனுடைய அத்தை மகள் காத்துக் கொண்டிருக்கிறாள். அவளைத்தான் அன்பு திருமணம் செய்து கொள்ளப் போகிறான். என் மகன் எப்போதுமே என் பேச்சை மீறமாட்டான் என பெரிய குண்டாக தூக்கி போடுகிறார். இனி அன்பு தான் அழகான் என்று தெரிந்து ஆனந்தி காதலித்தாலும் அன்புவின் அம்மா மூலம் சிக்கல் வரப்போவது உறுதி.

மேலும் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி தேவையில்லாமல் வேறு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வது போல் காட்டப்பட்டிருக்கிறது. தன் மீது மோத வந்த பைக் ஓட்டி வந்த ஆளை ஆனந்தி திட்டுகிறாள். அதற்கு அந்த ஆள் நான் யார் என்று தெரியாமல் நீ என்னை திட்டிட்ட, உன்ன நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்கிறார். இனி இதை வைத்து எத்தனை நாள் பிரச்சனையை ஓட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →