1. Home
  2. கோலிவுட்

ஆடு பகை குட்டி உறவா.? நாகார்ஜுனாவை முதல் மனைவி பிரிய காரணம்

ஆடு பகை குட்டி உறவா.? நாகார்ஜுனாவை முதல் மனைவி பிரிய காரணம்

Nagarjuna: ரஜினி, கமல் தமிழ் சினிமாவில் எப்படியோ அதே போல் தான் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாகர்ஜுனாவின் மனைவி நடிகை அமலா என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அமலா நாகார்ஜுனாவுக்கு இரண்டாவது மனைவி தான். 1984 ஆம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை நாகார்ஜுனா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. ஆனால் 1990 ஆம் ஆண்டு நாகார்ஜுனா மற்றும் லட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதாவது நாகர்ஜுனாவின் தந்தை மற்றும் லட்சுமி தந்தை இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் குடும்ப சம்பந்தத்துடன் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணம் ஆன சில வருடங்களில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

நாகார்ஜுனனின் முதல் மனைவி லட்சுமி

ஆடு பகை குட்டி உறவா.? நாகார்ஜுனாவை முதல் மனைவி பிரிய காரணம்
nagarjuna-lakshmi

மேலும் நாகர்ஜுனா லட்சுமியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. லட்சுமி இடம் வளர்ந்து வந்த நாக சைதன்யா தந்தை நாகார்ஜுனா உடன் சுமுக உறவில் இருந்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா லட்சுமியை விவாகரத்து செய்த பின்பு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அகில் என்ற மகனும் உள்ளார். அவருடனும் நாக சைதன்யா நட்புடன் தான் பழகி வருகிறார். மேலும் லட்சுமியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்னையில் வசித்து வந்தார். அதன் பிறகு நாக சைதன்யா ஹைதராபாத்தில் குடியேறினார்.

நாக சைதன்யா உடன் அவரது தாய் லட்சுமி

ஆடு பகை குட்டி உறவா.? நாகார்ஜுனாவை முதல் மனைவி பிரிய காரணம்
naga-chaithanya-lakshmi

மேலும் நடிகை சமந்தாவை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள்ளும் சில கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விட்டனர். இப்போது முழுவதுமாக நாக சைதன்யா தன்னுடைய பட வேலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.