சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

விஜய் போட்டுள்ள 5 மெகா திட்டம்.. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடக்கும் முதல் மாநாடு

Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகளை கழகத் தொண்டர்கள் படுதீவிரமாக செய்து வருகிறார்கள். மேலும் இப்போது ஐந்து மெகா திட்டங்களை விஜய் போட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதலே பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை தொடங்கினார். இது கல்வி சார்ந்ததாக உள்ள நிலையில் அடுத்ததாக அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்.

அந்த வகையில் ஒரு மாநில மாநாடு, நான்கு மண்டல மாநாடு மற்றும் 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் முதல் கட்டமாக செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் திருச்சியில் பிரம்மாண்டமாக முதல் மாநாடு நடக்க உள்ளது.

விஜய்யின் 5 மெகா திட்டங்கள்

அடுத்ததாக 100 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபயணம் மூலமாகவே சென்று மக்களின் கருத்துக்களை விஜய் கேட்கப் போகிறார். நடைப்பயணம் மூலமாக விஜய் செல்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவேற்றம் செய்த அடுத்த நாளே கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர். கட்சிக்கு பெயர், கொடி மற்றும் சின்னம் என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆகையால் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கட்சி தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே 2026 இல் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை விஜய்யின் கட்சி ஏற்படுத்த உள்ளது.

அரசியலில் வேகம் எடுக்கும் விஜய்

- Advertisement -spot_img

Trending News