புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெளிநாட்டு பாடகர்களுக்கு 200 கோடி வாரி இறைத்த அம்பானி.. லட்சத்தில் கொடுத்த ஸ்ரேயா கோஷலுக்கு குவிந்த பாராட்டு

Ambani: சோசியல் மீடியா பக்கம் வந்தாலே அம்பானி வீட்டு கல்யாணத்தைப் பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரான அவர் தன் மகன் கல்யாணத்தை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பிரபலங்கள் இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களை சிறப்பாக கவனித்த அம்பானி பல பரிசு பொருட்களையும் கொடுத்து அசத்தியிருந்தார்.

அது மட்டுமின்றி திருமணத்தில் அனைத்து விதமான உணவு வகைகள், பார்ட்டி என பல கொண்டாட்டங்கள் இருந்தது. அதேபோல் மனதை மயக்கும் இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றது.

இதில் ஏ ஆர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற கச்சேரி பலரையும் புல்லரிக்க வைத்தது. அந்த வகையில் அம்பானி வீட்டு திருமணத்தில் பாடிய பாடகர்களின் சம்பள விவரங்கள் பற்றி இங்கு காண்போம்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய பாடகர்கள்

கடந்த மார்ச் மாதம் ஆனந்த் அம்பானி, ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பாப்பாடகி ரிஹானா கலந்து கொண்டார். அவருக்கு 74 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மே மாதம் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்வு சொகுசு கப்பலில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாடகியும் நடன கலைஞருமான ஷகீராவுக்கு 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பாப் பாடகர் கேட்டி பெர்ரிக்கு 45 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த திருமண நிகழ்வில் ஹாலிவுட் பாடகர் ஜஸ்டின் பீபர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு 83 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக வெளிநாட்டு பாடகர்களுக்கு அம்பானி பல கோடிகளை வாரி இறைத்திருக்கிறார்.

ஆனால் நம்ம ஊரு பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் கஞ்சத்தனம் காட்டி இருக்கிறார். அதன்படி அவருக்கு 25 லட்சம் மட்டும் தான் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவருடைய குரலை அங்கு இருந்தவர்கள் அத்தனை பேருமே மெய்மறந்து ரசித்தார்கள்.

ஆனாலும் அம்பானி இந்த அளவுக்கு ஓரவஞ்சனை செய்திருக்கக் கூடாது. வெளிநாட்டு பிரபலங்களுக்கு இருக்கும் மதிப்பு இந்திய பிரபலங்களுக்கு இல்லை. இருந்தாலும் ஸ்ரேயா கோஷலின் குரல் மொத்த நிகழ்ச்சியிலும் முத்தாய்ப்பாக இருந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மகன் கல்யாணத்திற்கு கோடிகளை வாரி இறைத்த அம்பானி

Trending News