காதலனை ஆட்டி படைத்த சந்தேகம்.. அநியாயமாக உயிரை விட்ட சிரிப்பு நடிகை

Gossip: எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் அந்த நடிகை நடிக்க வந்த வேகத்திலேயே டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்ததில் பிஸியாக இருந்தார் அந்த நடிகை.

ஆனால் திடீரென அவருடைய மரணச் செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. காதல் தோல்வியால் நடிகை தற்கொலை செய்து கொண்டதாக முதலில் பேசப்பட்டது.

ஆனால் பிறகு நடந்த விசாரணையில் அவர் பலவந்தப்படுத்தப்பட்டு இறந்தது தெரிய வந்தது. அதாவது நடிகை நடிக்க வந்ததால் அவருடைய காதலனுக்கு அவர் மீது மிகப்பெரும் சந்தேகம். அது கொஞ்சம் கொஞ்சமாக பழிவாங்கும் வெறியாக மாறி இருக்கிறது.

நடிகையின் மரணத்தின் மர்மம்

ஒரு நாள் நடிகையை ஏமாற்றி அழைத்துச் சென்ற காதலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை பலவந்தப்படுத்தி இருக்கிறார். இதனால் சுயநினைவின்றி இருந்த நடிகைக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.

அதன் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் நடிகை இறந்தும் போனார். இதனால் மனசொடிந்து போன நடிகையின் அம்மா நீதி கேட்டு போராடினார். ஆனாலும் நடிகையின் மரணத்தின் மர்மங்கள் மறைக்கப்பட்டு விட்டன.

நடிகை உயிர்நீத்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த மரணத்தின் மர்மம் தீர்ந்தபாடில்லை. மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த இந்த நடிகை எவ்வளவு சீக்கிரமாக முன்னேறினாரோ அதே வேகத்தில் உலகை விட்டும் சென்று விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →