Bsnl: இன்றைய டாப் ட்ரெண்டிங் செய்தி என்றால் அது பிஎஸ்என்எல் அறிவித்துள்ள மெகா ஆஃபர் பற்றி தான். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்த நிறுவனம் ஜியோ ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களால் சில வருடங்களாகவே டல்லடித்தது.
ஏகப்பட்ட ஆஃபர்கள் அதிவேக இன்டர்நெட் வசதி என வாடிக்கையாளர்களை மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்தனர். ஆனால் போகப் போக இவர்களின் ரீசார்ஜ் கட்டணம் அதிகரித்து வந்தது. சமீபத்தில் கூட ஜியோ தன்னுடைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது.
அதைப் பார்த்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டண தொகையை உயர்த்தினார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்ததோடு bsnl பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல் பிஎஸ்என்எல் நிறுவனமும் குறைந்த விலையில் திட்டங்களை கொடுத்து வருகிறது. அதன்படி 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா வரம்பற்ற கால் போன்ற வசதிகள் 45 நாட்களுக்கு கிடைக்கும்.
பிஎஸ்என்எல் செய்த சம்பவம்
மேலும் 599 ரூபாய் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, இலவச கால் உடன் 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. அடுத்து 997 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினமும் இரண்டு ஜிபி டேட்டாவுடன் 160 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
இப்படி பல சலுகைகளை கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் 2ஜி 3ஜி சிம்களை 4ஜிக்கு மாற்றும் வேலைகளிலும் மும்முரமாகியுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து 4ஜி சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இதனால் தற்போது 80 லட்சம் ஜியோ ஏர்டெல் வோடபோன் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் வந்துள்ளனர். இதனால் போட்டி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிலும் அம்பானி மகன் கல்யாணத்தில் பிஸியாக இருந்த நேரத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தட்டி தூக்கிய சம்பவம் தான் வேற லெவல் இருக்கிறது.