Dhanush In Raayan: என்னுடைய தோல்வியை நானா ஒத்துக்குற வரை ஒவ்வொரு நொடியும் நானே என்னை செதுக்குவேன் என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் சேதுபதி ஒரு ஹீரோவாக ஜெயித்து காட்டிவிட்டார். இவருக்கு இனி ஹீரோ இமேஜ் செட்டாகாது, வில்லனுடைய லுக் தான் இவரிடம் இருக்கிறது என்று தொடர்ந்து விஜய் சேதுபதி மீது நெகடிவ் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் ஹீரோவாக ஜெயிக்க முடியும் என்று அவருடைய 50வது படமான மகாராஜா படத்தில் நிரூபித்துக் காட்டி விட்டார்.
பொதுவாக விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கக்கூடிய படங்களின் கதை அனைத்துமே அவருடைய நடிப்பை பாராட்டும் வகையில் இருக்கும். அதே மாதிரி அழுத்தமான கதாபாத்திரத்தில் அவருடைய பலம் இதுதான் என்று உணர்த்தும் வகையில் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதனால் தான் மகாராஜா படம் ஆஸ்கர் விருதை வாங்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.
தனுசுக்கு கை கொடுக்கப் போகும் ஐம்பதாவது படம்
இதே மாதிரி விஜய் சேதுபதி போல் தனுசுக்கும் தற்போது ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதாவது தனுஷ் இயக்கி எழுதி நடித்த 50வது படமான ராயன் வருகிற 26 ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமான கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார். இதில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏஆர் ரகுமான் மற்றும் தனுஷ் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் ஜூலை 16ஆம் தேதி வெளியான ட்ரெய்லர், கேங்ஸ்டர் களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற உள்ள ஓ ராயா பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் போஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறது.
இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இப்பாடலை ஏஆர் ரகுமான், தனுஷ் மற்றும் கனவ்யா துரைசாமி சேர்ந்து பாடியிருக்கிறார்கள். மேலும் ரஜினிக்கு எப்படி ஓப்பனிங்கில் ஒரு பாடலை வைத்து கொண்டாடியதோ, அதே மாதிரி தனுசுக்கும் இப்பாடல் ஓப்பனிங் வெற்றியை கொடுக்கும். இதன் மூலம் ஏஆர் ரகுமான், அனிருத்துக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கப் போகிறது.
ஏனென்றால் இந்தியன் 2 படத்தில் ஏஆர் ரகுமானுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து மொத்தமாக சொதப்பி அனைவரையும் ஏமாற்றிவிட்டார். அதனால் எப்போதுமே இசைப்புயல் பக்கத்தில் யாரும் வர முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப ராயன் படம் ஒரு தரமான பதிலடியாக இருக்கும். அந்த வகையில் தனுசுக்கு 50-வது படம் பெரிய வெற்றி படமாக கை கொடுக்கப் போகிறது.