வீக் என்டில் குடும்பத்துடன் பார்க்க தரமான வெப் சீரிஸ்.. நாகேந்திரன் ஹனிமூன் முழு விமர்சனம்

Nagendran’s Honeymoon: வார இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே பார்ப்பதற்கு தரமான வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் நாகேந்திரனின் ஹனிமூன் என்னும் தொடர்தான் அது.

மலையாளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த வலைத்தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் இந்த வலைத்தொடர் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

ஹீரோ ஒரு பயங்கரமான சோம்பேறி. ஆனால் அவனுக்கு வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாக வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்கு அவன் தேர்ந்தெடுக்கும் ஐடியா தான் இந்த தொடரின் கதை. விசா மற்றும் இதர செலவுகளுக்காக நாகேந்திரன் ஒரு வித்தியாசமான ஐடியாவை தேர்ந்தெடுக்கிறான்.

அதாவது வெவ்வேறு மதம், ஊர்களில் இருக்கும் ஐந்து பெண்களை திருமணம் செய்து அவர்கள் கொடுக்கும் வரதட்சணை மூலம் வெளிநாட்டுக்கு செல்வதுதான். ஐடியாவை பயன்படுத்தி திருமணம் வரைக்கும் வந்த பிறகு, ஏற்படும் ட்விஸ்ட்டை ரொம்பவும் கலகலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் இந்த வலைத்தொடரில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம்தான் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தம் ஆறு எபிசோடுகளை கொண்ட இந்த வலைத்தொடர் 3 மணி நேரம் ஒளிபரப்பாகிறது.

நித்தின் ரஞ்சி பணிக்கர் என்பவர் இந்த தொடரை இயக்கியிருக்கிறார். மேலும் இந்த தொடரில் சுராஜ் வெஞ்சரமூடு, கிரேஸ் ஆண்டனி, கனி குஸ்ருதி, ஸ்வேதா மேனன், ஆல்பி பஞ்சிகரன், ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

Next Story

- Advertisement -