மணிரத்னம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குனர். இவரை பார்த்து இயக்குனராக வேண்டும் என ஆசையில் கிராமத்தில் இருந்து பெட்டி படிக்கையை தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்தவர்கள் பல பேர். இன்று இருக்கும் பெரிய ஹீரோக்கள் பல பேரை வளர்த்து விட்டவர் மணிரத்தினம். மார்க்கெட் இல்லாத ஹீரோக்களையும் ரீஎண்ட்ரி கொடுத்து காப்பாற்றியுள்ளார்.
மாதவன்: மின்னலே, அலைபாயுதே, ரன் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மாதவன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவரை கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கச் செய்து மீட்டு வந்தார் மணிரத்தினம்.
விக்ரம்: பீமா, கந்தசாமி படங்களின் தோல்விக்கு பின்னர் துவண்டு போயிருந்த விக்ரமின் மார்க்கெட்டை தன்னுடைய ராவணன் படத்தின் மூலம் மீட்டெடுத்து வந்தார் மணிரத்தினம். இந்த படம் விக்ரமின் நடிப்புக்கு தீனி போட்டது. அதன் பின்னர் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் சியான்.
இரண்டு செல்லத்தையும் விட்டுக் கொடுக்காத மணி
அரவிந்சாமி: தன்னுடைய செல்ல பின்னையான அரவிந்த் சாமியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே மணிரத்தினம் தான். ரஜினி காந்தியின் சூப்பர்ஹிட்டான தளபதி படத்தில் தான் அரவிந்த்சாமி அறிமுகமானார். அதன் பின் மார்க்கெட்டில் இல்லாத அவரை தன்னுடைய கடல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க செய்தார் மணிரத்தினம்.
சிம்பு: மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்து வந்த சிம்புவை பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஒதுக்கிய பின்பும் இவர் தன்னுடைய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்க செய்தார். அந்த படத்திற்கு பிறகு சிம்பு, மணிரத்தினம் படத்திலேயே நடித்து விட்டார் என மற்ற இயக்குனர்களும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர்.