Jio and Bsnl: கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு பின்னாடியே ஆப்பையும் வைக்கிறதுதான் ஜியோ. அதாவது ஆரம்பத்தில் இலவசம் என்று ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தி மக்களை அதில் அடிமைப்படுத்தி விட்டார்கள். அதன் பின் போக போக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வைத்து தற்போது அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் படி ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஆப்பை வைத்து விட்டார்கள்.
இதனால் கோபப்பட்ட வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மை தூக்கிப்போட்டு வேற சிம்முக்கு போகலாம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் கஸ்டமரின் கோபத்தை தணிக்க தற்போது ஜியோ சிம் மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது 3 ப்ரீபெய்ட் திட்டங்களான டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து கூடுதலாக ஓடிடி ஆஃபரையும் வழங்கி உள்ளது.
ஆஃபரை தெறிக்க விட்ட ஜியோ
புதிதாக சேர்க்கப்பட்ட திட்டங்களின் படி ரூபாய்329, ரூபாய்949 மற்றும் 1049 ப்ரீபெய்ட் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன் ஜியோ நிறுவனத்தின் கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்று திட்டங்களில் ஒன்று அதை வழங்கப் போகிறது. அது என்னென்ன திட்டம் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூபாய்329 ப்ரீபெய்டு திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி, இதன் கீழ் 1.5 டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள். அத்துடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். அந்த வகையில் கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ நன்மையும் கிடைக்கும். ஆனால் இதில் ஜியோவின் 5G சலுகைகள் எதுவும் கிடையாது.
ரிலையன்ஸ் ஜியோ ரூபாய்949, ப்ரீபெய்டு திட்டம் 84 நாட்களில் சர்வீஸ் வேலிடியுடன் கிடைக்கிறது. மேலும் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தின் அடிப்படையில் 90 நாட்கள் அல்லது மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தவுடன் வருகிறது. இந்தத் திட்டத்திற்கு 5ஜி ஆஃபர் உண்டு.
ரிலையன்ஸ் ஜியோ ரூபாய்1049, ப்ரீபெய்டு திட்டம் 84 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடியுடன் வருகிறது. மேலும் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் உண்டு. கூடுதலாக ஜியோ டிவி மொபைல் ஆப்ஸ் மூலம் sony live மற்றும் G5 ஆகிய சந்தாக்களும் கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் 5 ஜி சலுகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அடிப்படை பிளானின் ரீசார்ஜ் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஜியோவின் முக்கிய போட்டியாளராக இருக்கும் பாரதி ஏர்டெல் பிரிபெய்டு திட்டங்கள் மீதான விலை உயர்வு பொருத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி ஜியோ மற்றும் bsnl நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீசார்ஜ் தொகையை கூட்டி வருகிறது. ஆனால் ஜியோ வை விட பிஎஸ்என்எல் ரீசார்ஜ் தொகை கம்மியாக இருப்பதால் மக்கள் மறுபடியும் BSNL தேடிப் போகிறார்கள்.