Watermelon 65: குலோப்ஜாமுனை நசுக்கி, அதை ஐஸ்கிரீமில் சேர்த்து சாப்பிட்டார்கள். இட்லியில் நாவல் பழத்தை போட்டு அதன் மீது சட்டினி ஊத்தி சாப்பிட்டார்கள். இது போன்ற வீடியோக்களை இணையத்தில் பார்க்கும்போதே என்ன இது என்பது போல் இருந்தது.
இந்த விஷயங்களுக்கே டப் கொடுக்கும் வகையில் நேற்றிலிருந்து இன்னொரு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதுதான் தர்பூசணி 65. வெயில் காலத்தில் நன்கு பழுத்த தர்பூசணி ஒன்றை வாங்கி பீஸ் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்.
வெயில் காலத்தில் என்றே கடவுள் கண்டுபிடித்த அற்புதமான பரிசு. எவ்வளவு விலை ஏறினாலும் தர்பூசணியை வாங்கி சாப்பிட்டால்தான் அந்தக் கோடை காலம் பூர்த்தியாகும். அந்த தர்பூசணியில் 65 செய்வதெல்லாம் ரொம்பவும் அபத்தம்.
சிக்கன் 65 செய்வது போல் மசாலாவை ரெடி பண்ணி கொள்கிறார்கள். அதில் கூம்பு சேப்பில் வெட்டப்பட்ட தர்பூசணியை தடவுகிறார்கள். பின்னர் அந்த தர்பூசணியை முட்டை மற்றும் ரொட்டித் தூளில் தடவி சூடான எண்ணெயில் போட்டு பொறிக்கிறார்கள்.
இப்படி ஒரு வீடியோவை பார்த்தது பிரேம்ஜி ஸ்டைலில் என்ன கொடுமை சார் இது என்று சொல்லத்தான் தோன்றுகிறது. உணவு பழக்கம் மாறுவது என்பதெல்லாம் கால நிலை கேட்ப நடப்பது தான். ஆனால் இப்படி வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்ற பெயரில் முகத்தை சுளிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சில இணையவாசிகள்.