Madhavan: மேடி மாதவனுக்கு இப்போதும் பெண் ரசிகர்கள் அதிகம் இருந்து வருகின்றனர். தன்னுடைய தோற்றத்தை மிகவும் இளமையாகவும், வசீகரமாகவும் வைத்துக்கொள்ளக் கூடியவர். தொடர்ந்து படங்களிலும் மிரட்டி வருகிறார்.
அதுவும் சைத்தான் படத்தில் அவர் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்போது உடம்பை குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் மாதவன் 21 நாட்களில் 15 கிலோ உடல் எடையை குறைப்பது பற்றி ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது மாதவன் தி ராக்கெட்டரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்காக தனது உடல் எடையையும் அதிகமாக கூட்டி இருந்தார். அதன் பிறகு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தனது உடல் எடையையும் சரமாரியாக குறைத்து இருந்தார்.
உடலைக் குறைத்த மாதவன் சொன்ன சீக்ரெட்
எவ்வாறு இவரால் மட்டும் இப்படி முடிகிறது என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் இருந்தது. அதாவது ஜிம் ஒர்க் அவுட் மற்றும் ஓட்டம் இல்லாமல் 21 நாட்களில் தனது உடல் எடையை மாதவன் குறைத்தாராம். 54 வயதான மாதவன் ஒவ்வொரு உணவையும் 45 முதல் 60 முறை மென்று சாப்பிட்டாராம். தண்ணீரையும் மெல்லுங்கள், கவனத்துடன் சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம்.
மேலும் மதியம் மூன்று மணிக்கு பிறகு எந்த வித பச்சையான உணவுகளையும் உண்ண மாட்டாராம். தன்னுடைய இரவு உணவை 6.45க்குள் முடித்துக் கொள்வாராம். இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் மற்றும் அதிகாலை நீண்ட நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இரவு தூங்குவதற்கு முன் 90 நிமிடங்களுக்கு மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சி போன்ற திரை சார்ந்த விஷயங்கள் இல்லாமல் பழகியுள்ளார். ஆரோக்கியமான உணவு முறை மட்டுமே உடல் எடையை குறைக்க காரணமாக அமைந்தது என்று மாதவன் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு உடல் எடையை அதிகம் கூட்டுவதற்காக அப்போது அப்ளைடு கினீசியாலஜி என்ற முறையை பயன்படுத்தி உள்ளார். மேலும் அந்த நேரங்களில் அதிகம் கேக் சாப்பிட்டதால் உடல் முழுவதும் வீங்கியது. அப்போது என்னால் கீழே குனிந்து தன்னுடைய லேசை கட்டுவதே கடினம் என்றும் அந்த பேட்டியில் மாதவன் தனது உடல் பருமன் மற்றும் குறைப்பு பற்றி விவரித்திருந்தார்.
இளமையின் துள்ளலில் மாதவன்
- தமிழில் அடுத்த மேடியாக கால் பதிக்கும் சாக்லேட் பாய்
- ரொமான்டிக் பண்ணி வசியம் செய்த மாதவன்
- சென்டிமென்ட்டா அவர் வேணும்னு அடம் பிடித்த மாதவன்