12 முறை மோதிய விக்ரம், பிரசாந்த்.. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தீராத பகையுடன் மோதும் சம்பவம்

Vikram: நடிகர் விக்ரம் மற்றும் பிரசாந்த் இருவரும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரே நாளில் தங்களது படங்களை வெளியிடுகிறார்கள். விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படமும், பிரசாந்த் அந்தகன் படமும் திரையில் மோதிக்கொள்ள இருக்கிறது.

இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் மற்றும் விக்ரமின் தாயார் ஆகியோர் உடன் பிறந்தவர்கள். விக்ரமின் அம்மா காதல் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பம் இடையே சுமூக உறவு இல்லாமல் இருந்து வருகிறது.

இதனால் இதற்கு முன்பு பலமுறை விக்ரம் மற்றும் பிரசாந்த் இருவரும் 12 முறை திரையில் ஒன்றாக மோதிக்கொண்டிருந்தனர். அதில் யாருக்கு அதிக வெற்றி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆனால் பிரசாந்தின் மார்க்கெட் குறையும் போது தான் விக்ரம் சேது படத்தின் மூலம் சினிமாவில் மார்க்கெட்டை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 முறை திரையில் மோதிக்கொண்ட விக்ரம் மற்றும் பிரசாந்தின் படங்கள்

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் சேது படம் வெளியாகி இருந்தது. இதே ஆண்டு செல்வா இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் ஆசையில் ஒரு கடிதம் படம் வெளியானது. ஆனால் இதில் சேது படம் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு விக்ரமின் காசி மற்றும் பிரசாந்தின் மஜ்னு படங்கள் மோதிக்கொண்டது. இதில் மஜ்னு படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது.

இதே ஆண்டு தில் படம் வெளியான நிலையில் பிரசாந்தின் ஸ்டார் படம் 11 நாட்கள் கழித்து வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 2003 ஆம் ஆண்டு பிரசாந்தின் விரும்புகிறேன் படம் வெளியான மூன்றாவது வாரம் விக்ரமின் தூள் படம் வெளியானது.

மேலும் இதே ஆண்டு பிரசாந்தின் வின்னர் படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் விக்ரமின் பிதாமகன் படம் வெளியானது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பிதாமகன் படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

ஒரு மாத இடைவெளியில் பிரஷாந்த் மற்றும் விக்ரம் படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் வைகாசி பொறந்தாச்சு மற்றும் என் காதல் கண்மணி படங்கள் வெளியானது. இதில் பிரசாந்துக்கு வைகாசி பொறந்தாச்சு படம் தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

மேலும் 1992 ஆம் ஆண்டு பிரசாந்தின் வண்ணவண்ண பூக்கள் மற்றும் விக்ரமின் காதல் கீதம் படம் ஒரு மாத இடைவெளியில் வெளியாகி இருந்தது. அதேபோல் சேது மற்றும் பிரசாந்தின் ஹலோ படங்கள் ஒரு மாத இடைவெளியில் வெளியான நிலையில் சேது வெற்றி பெற்றது.

அடுத்ததாக பிரியாத வரம் வேண்டும் மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்கள் ஒன்றாக மோதிக்கொண்டதில் பிரசாந்த் வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு விக்ரமின் ஐ படம் வெளியான 15 நாட்களில் பிரசாந்தின் புலன்விசாரணை 2 படம் வெளியாகி இருந்தது.

2011ஆம் ஆண்டு விக்ரமின் ராஜபேட்டை படமும், பிரசாந்தின் மம்மூட்டியான் படமும் மோதிக்கொண்டது. இதில் மம்முட்டியான் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பதை ஆகஸ்ட் 15 தான் தெரியவரும்.

சம்பவத்திற்கு தயாராகும் தங்கலான்