Dhanush: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரின் 50வது படமான ராயன் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
அதில் தனுஷ் பல விஷயங்களை பற்றி பேசி இருந்தார். ஆனால் போயஸ் கார்டனில் 150 கோடிக்கு வீடு வாங்கியதை பற்றி அவர் கொடுத்த விளக்கமும் கதையும் தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ஒரு விதத்தில் அது இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு தன்னம்பிக்கை தரும் பேச்சு தான்.
அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அவர் சினிமாவிற்கு கஷ்டப்பட்டு வந்தது போல் சில விஷயங்களை பேசி இருந்தார். உண்மையில் அவருடைய அப்பா மிகப்பெரிய இயக்குனர், அண்ணனும் ஒரு இயக்குனர்.
அந்தப் பின்புலத்தை வைத்து தான் அவர் சினிமாவில் காலடி வைத்தார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த பல படங்கள் குடும்பத்தோடு பார்க்க முடியாத படியாக தான் இருந்தது.. தன் திருமணத்திற்கு பிறகு தான் அவர் தனக்கான பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
150 கோடி போயஸ் கார்டன் வீடு
மேலும் 18 வயதில் ஹீரோ, 20 வயதில் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்து. இப்படி ஒவ்வொன்றும் அவருக்கான அதிர்ஷ்டம் தான். அத்துடன் தன்னுடைய திறமையையும் சேர்த்து தான் இன்று இந்த உயரத்தை அவர் அடைந்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது என நெட்டிசன்கள் தற்போது அவருடைய பேச்சுக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். மேலும் அவருடைய மேடைப்பேச்சு கொஞ்சம் நாடகத்தனமாக இருப்பதாகவும் கைதட்டலுக்காகவோ அல்லது யாரையோ குத்தி காட்ட வேண்டும் என்பதற்காக பேசியது போல் இருக்கிறது.
மேலும் அவர் மேடையில் ஒவ்வொரு முறை பேசும் போதும் அதில் ரஜினியின் வாடை இருக்கிறது. எதுவுமே சொந்த சரக்கு இல்லை. மருமகன் என்ற கிரீடத்தை இறக்கி வைத்தாலும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் என்பதை அவர் அவ்வப்போது பதிவு செய்து கொண்டே இருக்கிறார்.
அது எதற்காக என்ற கேள்வியும் ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்படியாக தனுஷின் பேச்சு பஞ்சாயத்து ஆக மாறி இருந்தாலும் ராயன் வசூல் வேட்டை நடத்தும் என்பது டிக்கெட் முன்பதிவிலேயே தெரிகிறது.