பயணம், தோனி, ஜெய் பீம் என வித்தியாசமாய் படம் எடுப்பவர் ஞானவேல். தனக்கு உண்டான தனி மேஜிக் மற்றும் ஸ்டைலை படத்தில் கொடுக்க தவற மாட்டார். இப்படி இருக்க, உச்ச நட்சத்திரம் ரஜினியின் வேட்டையன் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
ஏற்கனவே பயணம் மற்றும் ஜெய் பீம் படங்களால் ரஜினியை கவர்ந்தவர் ஞானவேல். ஜெய் பீம் படத்தை பார்த்த ரஜினி அப்போதே அவரை கூப்பிட்டு பாராட்டியுள்ளார். சேர்ந்து படம் பண்ணலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
அதன் காரணமாக இப்பொழுது ரஜினியை வைத்து வேட்டையன் படம் இயக்கி வருகிறார் ஞானவேல். கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களில் இந்த படத்திற்கான சூட்டிங் நடைபெற்றது. ரஜினி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது.
எப்பொழுதுமே தனித்துவமாய் படம் எடுக்கும் ஞானவேலின் அடையாளம் இந்த படத்தில் இருப்பது கேள்விக்குறிதான். ரஜினியின் படம் ஹிட்டாக வேண்டும் என்றால் நிச்சயமாக கமர்சியல் அதற்குள் வரவேண்டும், சூப்பர் ஸ்டாரும் அதைத்தான் சமீப காலமாக விரும்புகிறார்.
ஞானவேலு ஸ்டைலை பல் பிடித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார்
இப்பொழுது வழக்கம் போல் காமெடி, சண்டை காட்சிகள், சென்டிமென்ட், பாட்டு என வேட்டையன் படமும் கமர்சியலாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள். சுமார் ஆயிரம் பேரை ஒன்று சேர்த்து ஒரு பாடல் காட்சி ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
லியோ படத்தில் கூட்டிய கூட்டம் போல் தினேஷ் மாஸ்டர் இந்த படத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தை வைத்து ஒரு பாடல் காட்சி எடுக்கிறாராம். இது ஞானவேல் ஸ்டைலே இல்லை என்கிறார்கள். இப்பொழுது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தால் கமர்சியல் இயக்குனராக மாறுகிறார் ஞானவேல்.
- வயசானாலும் சீற்றம் குறையாத சிங்கமாய் ரஜினிகாந்த்
- லைக்காவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்
- பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்