Arun Vijay: கோலிவுட் இயக்குனர்கள் பல சாதனைகளை செய்து பெருமைப்படுத்தி வருகின்றனர். அதில் புதுமை இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து பெரும் சாதனை செய்தார். அந்த வரிசையில் தற்போது பிரபல இயக்குனர் ஒரு புதுமை செய்துள்ளார்.
மைனா, கும்கி போன்ற பல நல்ல படைப்புகளை கொடுத்த பிரபு சாலமன் மாம்போ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதன் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த முறை அவர் ஒரிஜினல் சிங்கத்தை வைத்து படமாக்கி இருக்கிறார்.
டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் ரத்த உறவும் வனிதாவின் மகனுமான விஜய ஸ்ரீ ஹரி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஒரு இளைஞனுக்கும் சிங்கத்திற்கும் இருக்கும் உறவு தான் இப்படத்தின் கதை.
வைரலாகும் மாம்போ டைட்டில் லுக் போஸ்டர்
கிட்டத்தட்ட கும்கி படம் போல் தான் இந்த கதையும். ஆனால் ஒரிஜினல் சிங்கத்தை வைத்து ரிஸ்க் எடுத்து இருப்பதால் ஆசியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பிரபு சாலமன் தட்டி தூக்கியுள்ளார்.
இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. அதற்கு விஜயகுமார் வருகை தந்து படகுழுவினரை வாழ்த்தி உள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த போஸ்டரில் ஒரு சிறுவன் மீது சிங்கக்குட்டி படுத்திருப்பது போல் இருக்கிறது. மற்றொரு போஸ்டரில் ஒரு இளைஞன் சிங்கத்தை தூக்கி கொஞ்சுவது போலவும் இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே சிங்கக்குட்டியை வளர்த்து வரும் இளைஞனின் கதை என்பது தெரிகிறது. இப்படியாக நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஹீரோவாக அறிமுகமாகும் விஜயகுமாரின் பேரன்
- எஸ் ஜே சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீரதீரசூரன் டீம்
- விண்டேஜ் அஜித்தின் விடாமுயற்சி வைரல் போஸ்டர்
- விடுதலை பார்ட் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்