Lokesh: லோகேஷ் என்னத்தான் 500 கோடிக்கு மேல் வசூலை கொடுக்கும் அளவிற்கு ரஜினி, கமல், விஜய் என இவர்களை வைத்து படம் பண்ணினாலும் எப்பொழுதுமே எங்களுக்கு ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் கைதி படம் தான் என்று சொல்வதற்கு ஏற்ப தரமான சம்பவத்தை அதில் செய்திருக்கிறார். அந்த வகையில் எப்பொழுது கைதி இரண்டாம் பாகம் வரும் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரவாரப்படுத்தாமல் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி மறக்க முடியாத அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் தான் லோகேஷ் வெற்றிக்கு ஒரு மூல காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இதன் மூலம் தான் ஒவ்வொரு படத்திலும் lcu கதை வைக்கப்பட்டு மர்மமான முறையில் சில முடிச்சுகளை போட்டு கொண்டு வருகிறார்.
சம்பளத்தை அட்வான்ஸ் ஆக வாங்கிய லோகேஷ்
அந்த வகையில் கைதி இரண்டாம் பாகத்தில் எல்லாம் முடிச்சுகளையும் அவிழ்க்கும் விதமாக சம்பவத்தை செய்ய தயாராகிவிட்டார். எப்பொழுதுதான் ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள் என்று காத்துக்கொண்டு இருந்த நமக்கு இந்த ஆடி மாசம் ஒரு சிறப்பான செய்தியை கொடுத்திருக்கிறது. அதாவது தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, கூலி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இப்படத்தை முடித்தவுடன் எப்படியும் லோகேஷ், கைதி படத்தை தான் எடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அதன்படியே அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் கைதி இரண்டாம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட போகிறார். இப்படத்தின் கதைகள் அனைத்தும் எழுதிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சூட்டிங் மட்டும் விறுவிறுப்பாக போகப்போகிறது.
இப்படம் முழுக்க முழுக்க LCU கதையாக தான் இருக்கப் போகிறது. அந்த வகையில் ஆடி மாசம் நல்லது என்று சொல்வதற்கு ஏற்ப கைதி 2 படத்திற்காக அட்வான்ஸை லோகேஷ் வாங்கிக் கொண்டார். 2019 கைதி படத்தை பண்ணும் பொழுது லோகேஷ் 6கோடி சம்பளத்தை பெற்றார். ஆனால் இப்பொழுது இவருடைய ரேஞ்சும் மாறி இருக்கிறது. கைதி படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.
அதனால் சும்மா இருப்பாரா நம்ம லோகி, இதுதான் சான்ஸ் என்று வாங்குன சம்பளத்திலிருந்து அஞ்சு மடங்கு சம்பளம் அதிகரித்து வேணும் என்று கைதி இரண்டாம் பாகத்திற்கு 30 கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டார்.
மேலும் இதில் கமல்,சூர்யா எல்லோரும் வைத்து LCU கதையாக கொண்டு வரப் போகிறார். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 25 கோடியில் எடுக்கப்பட்ட கைதி 105 கோடிக்கு மேல் லாபம் கொடுத்திருக்கிறது. அதே மாதிரி இரண்டாம் பாகமும் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூல் ஆகும்.