இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கர் செயல்பட்டு வருகிறார். இந்திய அணியில் சீனியர் வீரர்கள் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புது கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
20 ஓவர் போட்டிகளில் அபார திறமை படைத்தவர் சூரியகுமார் யாதவ். அணியை வழிநடத்த தகுதியுள்ள வீரர் என்பதாலும் தான்,அவரைவிட சீனியர் வீரர் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் பணிச்சுமையை குறைக்கும் விதமாகத்தான் இவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என தேர்வு குழு தலைவர் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது புதிய கேப்டனாக பதவி ஏற்றிருக்கும் சூரியகுமார் யாதவ், ஒரு கார் பைத்தியம். பல திறமைகள் இருந்தும் இந்திய அணிக்கு மிகவும் லேட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மும்பை அணிக்காக விளையாடி தனது குழு திறமையும் காட்டி இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தோனியை மிஞ்சிய வாகன பிரியர்
சூரியகுமார் யாதவ் விதவிதமான கார்களை தனக்கு விருப்பமான முறையில் வடிவமைத்து கேரேஜில் அழகுப்படுத்தி வைத்துள்ளார். நிசான் ஜோங்கா: 8 லட்சம் மதிப்பிலான இந்த காரை தனிப்பட்ட முறையில் வடிவமைத்து ஆஃப் ரோடு செல்வதற்கு பயன்படுத்தி வருகிறார். இதுபோக இவரிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர் 33 லட்சத்திற்கும். ஆடி q6 கார் 64 லட்சத்திற்கும் இருக்கிறது.
இப்பொழுது சமீபத்தில் புதுவராக இரண்டு கார்களை வாங்கி தன்னுடைய கேரேஜ்ஜை அழகுப்படுத்தி உள்ளார். பிஎம்டபிள்யூ -5 சீரிஸ் 530D என்ற காரை சமீபத்தில் வாங்கியுள்ளார் இதன் விலை 75 இலட்சம். இப்பொழுது மெர்சிடெஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் என்னும் உயர்ந்த சொகுசு கார் ஒன்றை கோடி விலையில் வாங்கியுள்ளார்.இப்படி தோனி தான் விதவிதமாக கார்களை வாங்கி குவிப்பார் ஆனால் இப்பொழுது அவரை மிஞ்சி விட்டார் சூர்யா.