சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள்.. ராயனுக்கு போட்டியாக வரும் யோகி பாபு

This Week Release Movies: இந்தியன் 2 கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்துள்ள ரசிகர்கள் இந்த வார இறுதியை ராயனோடு கொண்டாட இருக்கின்றனர். தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே ஐந்து கோடியை வசூல் செய்திருக்கிறது. அதனால் இப்படத்தின் ரிலீஸ் தற்போது மீடியாக்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக ஓடிடி பொருத்தவரையில் 9 படங்கள் வெளியாகிறது. அதில் யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் சட்னி சாம்பார், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் நாளை வெளியாகிறது.

மேலும் சோனியா அகர்வால் நடித்துள்ள கிரான்மா, யுகேந்திரனின் காழ் ஆகிய படங்கள் தற்போது ஆகா தமிழ் தளத்தில் வெளியாகி உள்ளது. அடுத்ததாக அமேசான் ப்ரைம் தளத்தில் தி மினிஸ்ட்ரி ஆப் அர்ஜென்டில் மேன்லி வார்பேர் தமிழிலும் ஹிந்தியில் கில் ஆகிய படங்களும் வெளியாகிறது.

தனுஷோடு மோதும் யோகி பாபு

இதற்கு அடுத்ததாக நாளை அதாவது ஜூலை 26 ஆம் தேதி சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் வெளியான வெப்பன் ஆகா தமிழ் தளத்தில் வெளியாகிறது. அடுத்து மலையாள படமான பாரடைஸ் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் நாளை வெளியாகிறது.

நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் ஹிந்தி படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி நாளை வெளியாகிறது. இப்படியாக இந்த வார இறுதி காமெடி த்ரில்லர் ஆக்ஷன் போன்ற படங்களால் கலகலப்பாக மாற இருக்கிறது.

இதில் ராயனுக்கு போட்டியாக யோகி பாபுவின் சட்னி சாம்பார் ஓ டி டி தளத்தில் வெளியாவது ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் ரசிக்க வைத்த நிலையில் பிரமோஷனும் சோசியல் மீடியாவில் கலை கட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 26 ரிலீஸ் ஆகும் படங்கள்

Trending News