சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மொத்த தமிழ் சினிமா லாஜிக்கையே கோட்டை விட்ட ராயன்.. சுத்தமா எனோ தானோ செய்த காத்தவராயன்

தனுஷ் இயக்கி நடித்த 50வது படம் தான் ராயன். ஒரு தரப்பு மக்கள் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர்கள் கொண்டாடும் அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை என படத்தைப் பார்த்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

காத்தவராயன், முத்துவேல் ராயன், மாணிக்க ராயன் என அண்ணன் தம்பி மூன்று பேர். அவர்களுக்கு ஒரு தங்கை துர்கா இவர்கள்தான் படம். மூத்த அண்ணனும் கடைக்குட்டி தங்கையும் தான் பாசப்பிணைப்புகளாக இருக்கிறார்கள். அண்ணன், தங்கை பாசத்தை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என்று கூறலாம்.

படத்தில் முதல் பாகம் ஒரு எதிர்பார்ப்போடு நகர்கிறது ஆனால் இரண்டாம் பாகத்தை எப்படி நகர்த்த வேண்டும் என்பதில் கோட்டை விட்டுள்ளார் தனுஷ். மொத்த தமிழ் சினிமா லாஜிககே இந்த படத்தில் மிஸ் ஆகிவிட்டது.

காத்தவராயன் சின்ன வயசிலிருந்து வளர்த்த தம்பிகள் இரண்டு பேரும் ஏன் வில்லனுடன் சேர்கிறார்கள் என தெரியவில்லை. அவர்களுடன் சேர்வதற்கும் ஒரு ஆணித்தனமான காரணம் இல்லை. இப்படி பல விஷயங்களில் கோட்டை விட்டு இருக்கிறார் தனுஷ்.

சுத்தமா எனோ தானோ செய்த காத்தவராயன்

தங்கைக்கு ஏற்படும் அநீதியை கூட மறந்த அண்ணன்கள். அதை கூட பொறுப்பெடுத்தாமல் வில்லனுக்கு ஜால்ரா போடுகிறார்கள். இப்படி சம்பந்தமே இல்லாமல் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் ஏதோ செய்திருக்கிறார்கள்.

எஸ் ஜே சூர்யா நல்லவரா கெட்டவரா என்பதே தெரியாது. தனுசை ஏன் எதிர்க்கிறார் என்பதற்கு கூட ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இல்லை. பிரகாஷ்ராஜ் படத்தில் ஆங்காங்கே வந்து செல்கிறார். மொத்தத்தில் காத்தவராயன் இரண்டாம் பாகத்தில் ராயனை விட்டுக் கொடுத்து விட்டார்.

Trending News