பல கோடியை கமுக்கமாக சுருட்டிய விஷால்.. ஆணிவேரை ஆட்டம் காண வைத்த தயாரிப்பாளர்கள்

Vishal: சர்ச்சை என்றாலே விஷால் தான் என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் அவர் மீது இருக்கிறது. அதில் தற்போது அவர் பல கோடியை ஆட்டையை போட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி காட்டியுள்ளது.

விஷால் கடந்த 2015-19 காலகட்டத்தில் தமிழ் பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தார். அப்போது அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதை அடுத்து தமிழக அரசு இதை கவனிப்பதற்காக ஸ்பெஷல் அதிகாரி ஒருவரை நியமித்திருந்தது.

அவர் எடுத்த நடவடிக்கையின் பெயரில் தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டது. அதில் விஷால் 12 கோடி வரை முறைகேடு செய்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அதை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் அந்த தொகையை திருப்பி கொடுக்குமாறு விஷாலிடம் கூறியிருந்தனர்.

ஆனால் அவர் தரப்பிலிருந்து இதற்கான சரியான பதில் வராத நிலையில் நேற்று சங்கத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்திருக்கின்றனர். அதன்படி விஷால் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

12 கோடியை சுருட்டிய விஷால்

அதனால் இனி அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கலந்து பேசி அனுமதி வாங்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளனர். இது பரபரப்பு கிளப்பிய நிலையில் விஷால் அந்த பணம் நலிந்த தயாரிப்பாளர்களின் குடும்பங்களுக்காக செலவழிக்கப்பட்டது.

இது தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் கதிரேசன் என்பவருக்கு தெரியும். நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் தன் மீது அவதூறான கருத்துக்களை பரப்புவதால் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. இதற்கான நடவடிக்கையில் விஷால் தரப்பு தற்போது இறங்கி இருக்கிறார்களாம். ஆக மொத்தம் தயாரிப்பாளர் சங்கம் அவருடைய ஆணிவேரையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

விஷாலுக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்