Sudha Kongara: சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தார். சூர்யா நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். பயங்கர பிரமோஷன் செய்யப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக லாபம் அடையவில்லை.
இதை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் புறநானூறு படத்தை இவர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது அதில் பிரச்சனை ஏற்பட்டு சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.
இந்த சூழலில் சுதா ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் சாவர்க்கர் அனைவரும் மதிக்க கூடிய ஒரு தலைவர். அவர் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் அந்த பகுதியில் இருப்பவர்கள் அவரின் மனைவியை கிண்டல் செய்திருக்கின்றனர். இதனால் அவர் இனிமேல் படிக்க மாட்டேன் என அழுது இருக்கிறார். அப்போது சாவர்க்கர் யார் உன்னை கிண்டல் செய்வது என மனைவியின் கையை பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைத்தாராம்.
இங்கிருந்துதான் எனக்குள் சில கேள்விகள் ஆரம்பித்தது என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் உண்மையில் அது சாவர்க்கர் கிடையாது ஜோதிபா, சாவித்திரிபாய் புலே என நெட்டிசன்கள் கூறிய நிலையில் இது பரபரப்பானது.
வரலாற்றை மாற்றிய சுதா கொங்கரா
அதைத்தொடர்ந்து சுதா கொங்காரா, தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் நான் வரலாற்று மாணவி. 17 வயதில் என்னுடைய ஆசிரியர் சொன்னதை வைத்து அந்த பேட்டியில் கூறிவிட்டேன். உண்மை தன்மை என்ன என்பதை நான் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.
என் தவறுக்கு நான் வருந்துகிறேன். ஒருவருடைய உன்னதமான புகழை இன்னொருவருக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. என் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் தவறு செய்வது இயல்புதான் ஆனால் மன்னிப்பு கேட்டு அதை சரிப்படுத்தி விட்டீர்கள் என கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. நல்லா நடிக்கிறீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.