சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஊரே வலைவீசி தேடிய தமிழ் ராக்கர்ஸ் கைது.. தியேட்டர் உள்ளையே கட்டி தூக்கி போலீஸ்

Tamil Rockers: படம் நல்லா இருக்கோ இல்லையோ மக்கள் புது படத்தை திரையரங்களில் போய் பார்த்தால் மட்டும்தான் அதற்குப் பின்னணியில் இருந்து உழைத்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். ஆனால் சமீப காலமாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் புது படங்களை முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இணையத்தில் பார்க்க முடிகிறது.

அதுவும் தெள்ளத் தெளிவாக இருப்பதால் மக்கள் திரையரங்குகளில் போய் படத்தை பார்ப்பதை தவிர்த்து வந்தார்கள். இதனால் ஒட்டுமொத்த சினிமாவிற்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் அளவிற்கு பல சிக்கல்களை சந்தித்து வந்தது. அந்த வகையில் புது திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சினிமா துறைக்கு கொடுத்த தலைவலி

இவர் இணையத்தில் வெளியிட்ட படங்களால் தியேட்டர்களில் பெருமளவு வசூல் பாதிப்பாகவும், ஏராளமானவர் இலவசமாக இணையதளங்களில் பார்த்து விடுவதாகவும் பல குற்றச்சாட்டங்கள் வைக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின்னாக இருக்கும் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரளா சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவரை விசாரித்த பொழுது ஒரு படத்திற்கு 5000 ரூபாய் கமிஷன் பெற்று இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

அத்துடன் முதல் நாளில் வரும் படத்தில் முதல் காட்சிகே சென்று தியேட்டர்களில் யாருக்கும் தெரியாமல் சிறிய கேமராவை வைத்து வீடியோ எடுத்திருக்கிறார். இதை கடந்த ஒன்றை ஆண்டுகளாக செய்து வந்து புதிய படங்களை பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணையில் ஸ்டீபன் ராஜ் கூறியிருக்கிறார்.

அதாவது கேரளாவின் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் ரெக்கார்டு செய்து கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இந்த உண்மையை கண்டறியப்பட்டிருக்கிறது.

ரெண்டு வருஷமாக இப்படி கிட்டத்தட்ட இந்த வேலையை கமுக்கமாக பார்த்து வந்த ஸ்டீபன் ராஜ் தற்போது கையும் களவுமாக பிடிபட்டதால் ஒட்டுமொத்த சினிமாவும் பெருமூச்சுவிட்டு நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

ராயன் படத்திற்கு கிடைத்த விமர்சனம்

Trending News