ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பணத்தை வாங்கிட்டு டிமிக்கி கொடுத்த அசோக் செல்வன்.. ஆத்திரப்பட்டு பேசிய கே ராஜன்

Ashok Selvan and K Rajan: அசோக்செல்வன் அவ்வப்போது படங்களில் நடித்தாலும், நடித்த படங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமாகவும், தேர்ந்தெடுக்கும் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் மறக்க முடியாத அளவிற்கு இதற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்ட லெவலுக்கு உயர்ந்து வரும் அசோக் செல்வனின் சம்பளம் தற்போது மூன்று கோடி வரை உயர்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அசோக் செல்வன் நடித்த எமக்கும் தொழில் ரொமான்ஸ் படம் பல பிரச்சினைகளை தாண்டி தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

பணத்தை வாங்கிட்டு டிமிக்கி கொடுத்து அசோக் செல்வன்

இது சம்பந்தமாக இசை வெளியிட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்திருக்கிறது. இதில் இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் திருமலை நடித்துக் கொடுத்தால் மட்டும் போதுமா, பிரமோஷன் கூட வர முடியாதா என்று அசோக் செல்வனை ஆத்திரத்துடன் திட்டி பேசி இருக்கிறார்.

அதாவது எமக்கும் தொழில் ரொமான்ஸ் என்ற படத்தை புதுமுக இயக்குனர் பாலாஜி கேசவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தை திருமலை என்பவர் தயாரித்திருக்கிறார். அப்பொழுது இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் என்பவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கூட வர முடியாத அளவிற்கு அசோக் செல்வன் தற்போது பிஸியாகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆனால் டப்பிங் பண்ணுவதற்கு முன் சம்பள பாக்கியம் கொடுக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்த அசோக் செல்வனுக்கு ப்ரமோஷனுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? தயாரிப்பாளர்கள் என்ன உங்களுக்கு அடிமையா? தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லை என்றால் நடிகர்கள் யாரும் இல்லை என்று ஆதங்கத்துடன் அசோக் செல்வனை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

அதே மாதிரி இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் ஒரு படத்தை வெற்றி அடைய செய்வதற்கு எந்த அளவிற்கு போராடுகிறோமோ அதே மாதிரி அந்த படத்தை நன்றாக எடுத்து முடித்து திரையரங்கில் கொண்டு போய் சேர்க்கும் வரை நாங்கள் படும் கஷ்டம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது எந்த மாதிரியான ஒரு வேதனையை கொடுக்கும் என்று அசோக் செல்வனுக்கும் தெரியும்.

ஏனென்றால் அவரும் ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது கிட்டத்தட்ட பல மாதங்களாக ப்ரமோஷனுக்கு எந்தவித கால்ஷீட்டும் கொடுக்காமல் எங்க மொத்த அனைவரையும் இழுத்தடித்து படாதபாடு படுத்தி இருக்கிறார். என்று தொடர்ந்து அசோக் செல்வின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை இசை மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து கண்டிக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் வேதனையை நிவர்த்தி பண்ணுவதாக அமையும் என்று கே ராஜன் கூறியிருக்கிறார்.

Trending News