வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

போட்ட பட்ஜெட்டை நெருங்கிய ராயன்.. நிம்மதி பெரும் மூச்சுவிட்ட 3வது நாள் வசூல்

Raayan 3rd day collection: பொதுவாக எல்லா ஹீரோகளுக்கும் 50 ஆவது படம் என்பது ரொம்பவே தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தனுஷ், ஐம்பதாவது படத்தின் மூலம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைய வேண்டும் என்று நினைத்தார். அதனால் 50-வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி, எழுதி, நடித்திருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் அளவில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. அந்த வகையில் இப்படமும் கை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. இதில் தனுசுடன், எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

எடுத்த முயற்சியில் வெற்றி பெற்ற தனுஷ்

அத்துடன் தனுஷின் சகோதரர்களாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷானும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த காட்சிகளுடன் படமாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை இன்னும் மெருகேற்றுவதற்காக இசையமைத்து கொடுத்தது ஏ ஆர் ரகுமான். இப்படி இவர்கள் மூலம் உருவாக்கிய ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் ரிலீசானது. ரிலீசான முதல் இரண்டு நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூலை அடைந்திருக்கிறது. அத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மூன்றாவது நாளாக அனைத்து திரையரங்களிலும் ஹவுஸ்புல் போர்டு தான் போடப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ராயன் படம் வெற்றி பெற்றுவிட்டது.

இதனை தொடர்ந்து இப்படம் வெளிவந்த மூன்றாவது நாளில் உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் அடைந்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 40 கோடியும் தெலுங்கில் 7.5 கோடி மற்ற பகுதிகளில் 10 கோடியும், வெளிநாடுகளில் 20 கோடியும் வசூலை பெற்றிருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியில் எடுக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் போட்ட பட்ஜெட்டை தொட்டுவிடும். இதுவரை தனுஷ் நடித்து வெளிவந்த படங்களிலேயே மூன்று நாட்களில் இந்த அளவிற்கு வசூலை பார்த்த ஒரே படம் இந்த படமாக தான் இருக்கிறது. இப்பொழுது தான் தனுஷ் நாம் எடுத்த முயற்சி வீண் போகவில்லை என்று நினைக்கும் அளவிற்கு பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறார்.

ராயன் படத்தை செதுக்கி வெற்றியடைய செய்த தனுஷ்

Trending News