Producer new rules: தமிழ் சினிமா துறையில் சில விதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்று அதிரடியாக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் முதலாவதாக ஓடிடி தளத்தில் வெளியிடும் படங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்த திரைப்படமாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தபட்சம் 8வாரங்களுக்கு அடுத்து தான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும்.
அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கப் போகும் எந்த புது படமாக இருந்தாலும் அது சம்பந்தமாக படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசித்த பிறகு தான் நடிக்க வேண்டும் என்று சில தீர்மானங்களை போட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக சில கோட்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் போட்ட நிபந்தனையால் அவஸ்தைப்படும் தனுஷ்
ஏனென்றால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் இடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு இன்னும் வரை தனுஷ் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்து அடிக்கிறார். அதனால் ரெட் கார்ட் கொடுக்கும் விதமாக அவர் புதுசாக நடிக்கும் படங்களுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளிவந்த அறிவிப்பின்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்கம் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு ஒரு கூட்டத்தை இன்று சென்னையில் நடத்திருக்கிறார்கள்.
அதன்படி முன்னணி நடிகர்கள் நடிக்கும் புது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரத்துக்கு பின் தான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன் இது சம்பந்தமான விளம்பரங்களையும் நான்கு வாரங்களுக்கு பின் தான் வெளியிட வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளில் வந்து படத்தை பார்ப்பார்கள். இல்லை என்றால் குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் வைத்தே ஓடிடிதளத்தில் பார்த்துவிடலாம் என்று திரையரங்குகளில் வந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் எட்டு வாரம் இடைவெளி தேவை என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது சினிமா துறையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது தயாரிப்பாளர்களிடம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக வாங்கிவிட்டு அந்த படத்தில் நடிக்காமல் வேறொரு புது படங்கள் வந்தால் அதில் கமிட் ஆகி நடித்துக்கொண்டு அட்வான்ஸ் வாங்கிய பழைய தயாரிப்பாளர்களை அலைய விடுகிறார்கள்.
தற்போது இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருப்பதோடு மட்டுமில்லாமல், பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இதே மாதிரி செய்து கொண்டு வருவதால் இதற்கும் முடிவு கட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கி விட்டால் அந்த படத்தை நடித்து முடித்துவிட்டு தான் இன்னொரு தயாரிப்பாளர்களிடம் படம் பண்ண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து முடிவெடுத்து இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவதால் அதை முறைப்படுத்தி ஒரு சீரமைப்பு கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அதனால் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து தமிழ் சினிமாவின் எந்த ஒரு படப்பிடிப்பும் தொடங்கக்கூடாது என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.
ஏற்கனவே தொடங்கிய படங்களை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடித்து கொள்ளுமாறு தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். மேலும் புது படங்கள் எதுவும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் தொடங்கப்படக்கூடாது என்று தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
தனுசை சுற்றி வளைத்த சர்ச்சைகள்
- Dhanush: தனுஷோட அந்த சோகமான பாட்டுல வேலை பார்த்த 4 பேருக்கும் விவாகரத்து
- Dhanush: டிவிட்டர் பக்கம் போக முடில, அடித்து கொள்ளும் கமல்-ரஜினி பேன்ஸ்
- Dhanush: செஞ்ச பாவத்துக்கு தான் தனுஷ் இப்ப அனுபவிக்கிறாரு