புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்நீச்சல் போல் சன் டிவி சீரியலை ஆக்கிரமித்த 2 சீரியல்கள்.. சிங்கபெண்ணே சீரியலுக்கு கலாநிதி கொடுக்கும் நெருக்கடி

Sun Tv Serial: சீரியல் என்றாலே அழுகாச்சி, நெகட்டிவ் காட்சிகள், வில்லியின் ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து மன அழுத்தத்தை கொடுக்கும் விதமாக தான் இருக்கும் என்று மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அதையெல்லாம் தகர்க்கும் வழியாக சில சீரியல்கள் வித்தியாசமான கதைகளத்துடன் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து பார்க்கும் படி ஜெய்த்து காட்டி இருக்கிறது.

இந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் நடிப்பு நெகட்டிவ் ஆக இருந்தாலும் அதில் காமெடி கலந்த ஒரு நகைச்சுவையும், தன்னுடைய சொந்த காலில் நின்னு ஜெயித்து காட்ட வேண்டும் என்று மருமகள்களின் ஆதங்கமும் வெளிப்படுத்தும் விதமாக மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது.

முதல் இடத்தை பிடிக்க போராடிவரும் சிங்க பெண்ணே சீரியல்

அதன்பின் சில காரணங்களால் தடம் புரண்டு போனாலும் இப்பொழுது வரை எதிர்நீச்சலின் தாக்கம் மக்களிடம் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது. தற்போது இதை மறக்கடிக்கும் விதமாக எதிர்நீச்சல் சீரியல் போல சன் டிவியில் புதிதாக நுழைந்த இரண்டு சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் மல்லி சீரியலில் மல்லியின் ஆட்டமும், விஜய்யின் ரொமான்ஸ் பார்ப்பதற்கு தினமும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இவர்களுடைய கல்யாணத்தை பார்க்கும் விதமாக கச்சேரி கலை கட்டுகிறது. அத்துடன் இதில் நளினி மற்றும் அம்பிகாவின் நடிப்பு மன அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு சுவாரசியமாக அமைந்து வருகிறது. இதனை தொடர்ந்து மருமகள் சீரியலுக்கும் மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.

பாசத்தை மட்டுமே விரும்பி தாராள பிரபுவாக இருக்கும் ஆதிரைக்கும், கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவுக்கும் நடக்கப் போகும் கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்கு பல சூழ்ச்சிகள் ஏற்பட்டாலும், இவர்கள் வாழ்வில் ஒன்று சேர வேண்டும் என்று பிரபுவின் அத்தை போராடி வருகிறார். இதில் சித்திக் கொடுமையை அனுபவிக்கும் ஆதிரை வீட்டின் மொத்த சொத்தையும் சித்தி பெயருக்கு மாற்றும் விதமாக ஆதிரை அப்பாவிடம் பேசி இருக்கிறார்.

ஆனால் இந்த ரெஜிஸ்ட்ரேஷன் எப்படியும் நடக்காமல் நின்றுவிடும். இப்படி பல சுவாரசியமாக இந்த இரண்டு சீரியல்கள் வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஆனால் சிங்கபெண்ணே சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங் இல் கொஞ்சம் சரிவை பார்த்து இருப்பதால் கலாநிதி மாறன் இந்த சீரியலும் எதிர்நீச்சல் போல அடி வாங்கி விடுமோ என்ற பயத்தில் சிங்கபெண்ணே சீரியல் டீமுக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் வருகிற வாரத்தில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மொத்த டீமும் போராடி வருகிறார்கள்.

வெற்றி நடை போட்டு வந்த சிங்கபெண்ணே சீரியல்

Trending News