வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

யூடியூப் லைவில் தூக்கு போட முயற்சி, கைதான பிரியாணி மேன்.. அது என்னப்பா இர்ஃபான், டெய்லர் அக்கா சண்டை

யூட்யூபில் பணம் சம்பாதிப்பது என்பதை தாண்டி தற்போது குழாயடி சண்டை வரை வந்து நிற்கிறது. ஓஹோ என்று புகழடைந்து கொண்டிருக்கும் பிரபலங்கள், அவர்களை வம்புக்கு இழுத்து நெகட்டிவ் வழியாகவாது பாலவர்ஸ் ஏற்றுக்கொள்ள நினைக்கும் சிலர் என போர்க்களமாக இருக்கிறது.

இஷ்டத்திற்கு லைவ் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் அட்ரஸ் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கே போய் சண்டை போடும் பிரச்சனை எல்லாம் பார்த்திருப்போம். இப்படித்தான் பிரியாணி மேன் பற்ற வைத்த நெருப்பு ஒன்று காட்டுத்தியாக இருந்து கொண்டிருக்கிறது.

இர்ஃபான்

பிரியாணி மேனை பொறுத்த வரைக்கும் பொதுமக்கள் பார்க்கும் தளம் என்பதை கூட மறந்து இஷ்டத்திற்கு பேசுபவர். இவருக்கும் இர்ஃபானுக்கும் தான் முதலில் பிரச்சனையை ஆரம்பித்தது. இர்ஃபானை வம்புக்கு இழுத்த பிரியாணி மேன் குழந்தை பிறப்பதற்கு முன்பே என்ன குழந்தை என்று அவர் அறிவித்தது.

சில வருடங்களுக்கு முன்னால் அவருடைய காரில் விபத்து ஏற்பட்ட ஒரு பெண் இறந்தது என எல்லா கதையையும் இழுத்து விட்டார். பதிலுக்கு இர்ஃபான் ஆதாரத்தோடு பிரியாணி மேன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

டெய்லர் அக்கா

அந்த பஞ்சாயத்தை ஓரம் கட்டி விட்டு பிரியாணி மேன் அடுத்து வம்புக்கு இழுத்தது டைலர் அக்காவை. இந்த டைலர் அக்கா என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு காரணம் பிரியாணி மேன் தான்.

தயாளு என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நடத்தி வருபவர் இலவசமாக பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வருகிறார். இதில் அந்தப் பெண் தான் தைக்கும் ஜாக்கெட்டுகளை போட்டு அதை தைத்த விதம், ஜாக்கெட் தைக்கும் போது இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறுவார்.

மேலும் தான் குடும்பத்துடன் நடத்தி வரும் தையல் பயிற்சி பள்ளிக்கு அப்ளிகேஷன் ஆரம்பிப்பதை தன்னுடைய பாலோவர்ஸ்களுக்கு பகிர்வார். இதைத்தான் பிரியாணி மேன் டெய்லர் அக்கா ஸ்கேம் பண்ணுகிறார் என்று ஒரு புரளியை கிளப்பிவிட்டார்.

இதை தொடர்ந்து நிறைய பேர் அந்த பெண்ணின் பக்கத்தில் போய் தவறான கமண்டுகள் கூட்டம் கூட பதிவிட்டார்கள். ஆனால் அந்த பெண் எதற்கும் பதில் அளிப்பதாக இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதுவும் பெண் என்பதால் ரொம்ப தரமட்டமான வார்த்தைகளை பிரியாணி மேன் உபயோகித்தார்.

A2D

A2D Nandha
A2D Nandha

இதைத்தொடர்ந்து A2D என்னும் யூட்யூப் சேனல் இந்த பிரச்சனையை தன் கையில் எடுத்தது. பொதுவாக சுற்றி நடக்கும் பிரச்சனைகள், மற்றும் அதில் தீர்வு காண்பது போன்றவற்றை தான் இந்த சேனலில் பேசுவார்கள். அப்படி இந்த பிரச்சனையை கையில் எடுத்து தயாளு தரப்பில் எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்டது.

கைதான பிரியாணி மேன்

இதைத் தொடர்ந்து பிரியாணி மேன் நேற்று யூடியூப் லைவ் ஒன்று போட்டு அதில் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் முயற்சித்தார். அவர் பேசுவதை லைவில் பார்த்துவிட்டு அவருடைய அம்மா வந்தாரா, அல்லது ஸ்கிரிப்ட்டா என்று தெரியவில்லை.

சரியாக அவருடைய அம்மா கதவை தட்டவும் பிரியாணி மேன் பானில் தொங்க வைத்திருந்த துணியை அகற்றிவிட்டார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பிரியாணி மேனை இதற்காக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தல்கள் எழுந்தது.

அதே நேரத்தில் பெண்களை ரொம்பவும் தவறாக பேசுகிறார் என அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரை தொடர்ந்து பிரியாணி மேன் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொது மக்களுக்கு இது போன்ற இன்ப்ளுன்சர்கள், லைக் மற்றும் வியூஸ்காக ஒருவித மன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -spot_img

Trending News