கனமழையால் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு.. அரசுக்கு தளபதி வைத்த வேண்டுகோள்

Thalapathy Vijay and Wayanad: இயற்கை சீற்றத்தால் பல இடங்களில் மிகப்பெரிய பேராபத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் தற்போது கேரளாவில் அமைந்திருக்கும் சுற்றுலா நகரமான வயநாடு பகுதியில் கனமழை அதிகமாக இருந்ததால் நேற்று நள்ளிரவு மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த துயர சம்பவத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

இதே மாதிரி ஏற்கனவே 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது மிகப்பெரிய இயற்கை சீற்றமாக வயநாடு நிலச்சரிவு ஒரு துயர சம்பவத்தை காட்டிவிட்டது. அந்த வகையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

இயற்கை சீற்றத்தில் சிக்கித் தவிக்கும் வயநாட்டு மக்கள்

இந்த நிலச்சரிவால் 500 வீடுகள் பாலங்கள் சாலைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய மீட்பு படையினர் உட்பட பல்வேறு மீட்பு குழுக்கள் ஒன்றாக சேர்ந்து நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட மக்களை மீட்க போராடி வருகிறார்கள். ஆனால் கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்திருக்கிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருப்பதால் சம்பவ இடத்திற்கு சென்று மீட்கும் பணியாளர்கள் சிரமப்பட்டு போராடி வருகிறார்கள்.

இந்தத் துயர சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவர் உயிரிழந்திருக்கிறார்கள். 200 வீடுகள் மண்ணில் புதைந்திருக்கிறது. இதில் பல பேர் சிக்கி இருக்கலாம் அதனால் அவர்களையும் மீட்டெடுக்கும் வகையில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேரம் ஆக ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.

viijay post
viijay post

அதனால் இதனை உடனே சரி செய்யும் வேலைகள் ஒவ்வொன்றும் நடைபெற்று வருகிறது. இந்த பேரிடரை எதிர்கொள்ள கேரளா அரசுக்கு 5 கோடி நிதி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய், இந்த வயநாடு நிலச்சரிவு மிகவும் சோகத்தை ஏற்படுத்திருக்கிறது.

அங்குள்ள மக்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன். மேலும் துயரம் அடைந்த குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்து பதிவு போட்டிருக்கிறார்.

Trending News

- Advertisement -spot_img