புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

அதானி சொந்த துறைமுகத்தில் நடந்த 110 கோடி கடத்தல் வியாபாரம்.. அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

Adani: அதானி குழுமம் குஜராத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். முதன்மை நிறுவனமாக பல்வேறு வணிக ஆற்றல், வளங்கள், தளவாடங்கள், ரியல் எஸ்டே, வேளாண் வணிகம், நிதி சேவைகள் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவை வர்த்தக நிறுவனமாக பார்த்து வருகிறார்கள். வருட வருமானமாக 13 பில்லியன் டாலர்கள் இருக்கும்.

இந்த நிறுவனம் 50 நாடுகளில் 70 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய துறைமுக இயக்கமாக இருக்கிறது. இதில் முந்தரா துறைமுகம் உட்பட பத்து துறைமுகங்கள் மற்றும் டெர்மினல்களை கொண்டுள்ளது. இக்குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் பிராண்டான “பார்ச்சூனை”(Fortune) சொந்தமாக வைத்திருக்கிறது.

தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம்

இப்படி இவருடைய நிறுவனங்களை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதானி என்டர்பிரைஸ் லிமிடெட் வருமானத்தில் கொடி கட்டி பறக்கிறது. அப்படிப்பட்ட பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு சுங்கத்துறையினர் அதிரடி சோதனையை நடத்திருக்கிறார்கள்.

அப்போது மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜருக்கு அனுப்ப இரண்டு கண்டெய்னர்களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த 110 கோடி மதிப்பிலான 68 லட்சம் டிராமடோல் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். இந்த மாத்திரை 2018 ஆம் ஆண்டு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை விசாரித்த பொழுது ராஜ்கோட்டைச் சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து ராஜ்கோட், காந்திநகர் மற்றும் காந்திதாம் ஆகிய இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சமீப காலமாக தடை செய்யப்பட்ட பொருள்கள் குஜராத்தில் அதிகமாக காணப்பட்டதை ஒட்டி அங்கே சோதனை நடத்தி 110 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அங்கிருந்து நாடு முழுவதும் இதை பரப்பப்படுகிறதா என்ற விசாரணையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு ஏற்படுத்திய சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News