வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தனுசுக்கு ரெட் கார்டு போட்டாலும் ஹேப்பி மூடில் சன் டிவி.. ராயன் ஆடிய, ஆடப்போகும் அசுர வேட்டை

தனுஷின் ராயன் படம் அவருக்கு 50வது படமாக அமைந்துள்ளது. இதை அவரே டைரக்ட் செய்து கலக்கியிருக்கிறார். இந்த படம் உலக அளவில் 107 கோடிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடிகளும் வசூல் செய்து சன் டிவிக்கு ஒரு கணிசமான தொகையை பெற்றுத்தந்துள்ளது.

இதனால் சன் டிவி ஹேப்பி மூடில் இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் 2017 ஆம் ஆண்டு “பா பாண்டி” படத்தை டைரக்ட் செய்து அசத்தி இருந்தார். இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்பொழுது “ராயன்” படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தையும் டைரக்ட் செய்ய உள்ளார்.

ராயன் படத்தை தயாரித்த சன் டிவிக்கு இந்த படத்திற்கான செலவு என்று பார்த்தால் அது தனுஷின் சம்பளம் மட்டும் தான். அதை கூட அவர்கள் டீல் பேசி சமாளித்து விட்டார்கள். தனுசுக்கு சம்பளமாக இந்த படத்திற்கு இரு தவணைகளாக 40 கோடிகள் வரை பேசி கொடுத்துள்ளனர்.

ராயன் ஆடிய, ஆடப்போகும் அசுர வேட்டை

ராயன் படத்திற்காக 80 முதல் 90 கோடிகள் வரை சன் டிவி செலவு செய்துள்ளது இப்பொழுது இது வசூலித்தொகை மட்டும் கிட்டத்தட்ட 107 கோடிகள். இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறது சன் டிவி. இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தற்போது தனுஷ் மீது தற்போது ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பு சங்கத்தினர்.

தனுஷ் அடுத்ததாக இயக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்திற்கு “நீக்” என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் தங்களுக்கு ஒரு படம் இயக்குமாறு சன் டிவி தனுஷிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கும் தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். இப்பொழுது தனுஷ் இயக்கி நடிப்பதில் அசுர வேட்டை ஆடி வருகிறார்.

Trending News