வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வசூலை வாரி குவிக்கும் மொட்ட தலை ராயன்.. 6 நாளில் நிரம்பிய சன் பிக்சர்ஸ் கஜானா, பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Raayan Collection: தனுஷின் ஐம்பதாவது படம் என்ற சிறப்புடன் அவர இயக்கி நடித்து இருக்கும் ராயன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் வெளியான இப்படம் முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையில் உசுரே நீதானே பாடல் இப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆக மாறி இருக்கிறது. இது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்த நிலையில் வசூலும் தயாரிப்பு தரப்பை நிம்மதியில் ஆழ்த்தி இருக்கிறது.

கிட்டத்தட்ட நூறு கோடி பணத்தை தண்ணியாக செலவழித்த சன் பிக்சர்ஸ் கஜானா தற்போது நிரம்பியுள்ளது. அதன்படி முதல் நாளில் ராயன் இந்திய அளவில் 15 கோடிகளை வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கலெக்ஷன் அமோகமாக இருந்தது.

போட்ட காசை எடுத்த சன் பிக்சர்ஸ்

படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இரண்டாம் பாதியில் அடிதடி வெட்டு குத்து என இருப்பது மைனஸ் ஆக பார்க்கப்பட்டது. ஆனால் அது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை.

அந்த வகையில் ராயன் இந்த ஆறு நாட்களில் 92 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருக்கிறது. இந்த வாரமும் அடுத்த வாரமும் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த வாரம் விஜய் ஆண்டனி, யோகி பாபு ஆகியோரின் படங்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் சிறு பட்ஜெட் படங்கள் தான்.

அதனால் ராயனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது. அந்த வகையில் முதல் வாரத்தில் கலெக்ஷனை அள்ளிய தனுஷ் அடுத்த வாரமும் அதை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் விரைவில் 100 கோடி கிளப்பில் இணைய இருக்கும் ராயன் மூலம் தனுஷ் செஞ்சுரி அடித்துள்ளார்.

தனுசுக்கு வெற்றி படமாக மாறிய ராயன்

Trending News